கடவுச்சொல் -கருணாநிதி

உறக்கம் கலைந்து
எழுந்து ஒருநாள்
பணியெல்லாம் முடித்து
மீண்டும் உறங்க
செல்லு முன்னே
ஒவ்வொரு அடியிலும்
எத்தனை எத்தனை
கடவுச் சொல்
நினைவினில் வைத்திட
என்னடா வாழ்க்கை
இப்படி மாறியதே
என்றுதான் தோன்றிட ..
எண்ணினேன் அவற்றையெல்லாம்..
மின்னஞ்சல் முகநூல் ..
வங்கிக்கும் வலைப்பூவுக்கும்
கணினிக்கும் தானியங்கி பணம்
தருகின்ற எந்திரத்திற்கும்
இணையதள இதழ்களுக்கும்
மின்சாரவரி தொலைபேசி
கட்டணங்கள் கட்டுதற்கும்
சினிமா டிக்கட்டு
பேருந்து ரயிலுக்கும்
முன்பதிவு செய்திடவும்
இன்னும் பலவற்றிற்கும்
கடவுச்சொல் எனக்கென்று
இருந்த போதும்
இல்லாதது ஒன்று மட்டும்!
...
அன்பே..

உன் இதயத்தில்
நுழைவதற்குத் தேவையான
கடவுச்சொல் சொல்லி விடு
நம் காதல் கணக்கிற்கு
கண்மணியே..கவனமுடன்
எவனுக்கும் தெரியாமல்
என்னுள்ளே வைத்திருக்க!
இனிமேல் பொறுப்பதற்கு
மனம் இல்லை..
இன்னும் ஏன் தரவில்லை?

எழுதியவர் : கருணா (21-Nov-14, 5:16 pm)
பார்வை : 101

சிறந்த கவிதைகள்

மேலே