நட்பு என்னும் பூங்காவனம் -சகி

***நட்பு ***
மலர்கள் என்னும்
நந்தவன தோட்டமே ....
""நட்பு என்னும் பூங்காவனம் ""
பூங்காவனமெங்கும்
பல வண்ணகளைக்கொண்ட
சிறகடித்துப்பறக்கும்
வண்ணத்துப்பூச்சிகள்....
நட்பெனும் தோட்டத்தில்
கவலைகள் எதுவுமின்றி
பறந்து கொண்டே இருப்போம்
நம் மரணம் வரை ...
அழகிய வண்ணத்துப்பூச்சியாகவே...
கவலைகள் ஏதுமின்றி
பறக்கும் தேனீ கூட்டமாய்
பறப்போம்....
இனிப்பான தேனை
நட்பெனும் அமுதமாகவே
பருகுவோம்....
பசுமையான பூத்தோட்டம் ...
நட்பெனும் வட்டம்...
நிறம் மாற குணம்...
நிழல் தரும் மனம்...
நட்பெனும் பூங்காவனம்....
மழையில் செழித்திடும்
பூங்காவனாமாய்...
உண்மையான அன்பில்
அனைவரும் செழித்திடுவோம்
இப்புவியில்...
காற்றில் தலையசைக்கும்
மலர்களாய் ...
உண்மை அன்பிற்கு
தலையசைப்போம்....
தலைகுனிந்து செல்வோம்
உண்மை நட்பிற்கு மட்டுமே...
நட்பெனும் மழையில்
நனைத்திடுவோம்...
பசுமையான நட்பின்
நினைவுகளில்
வாழ்த்திடுவோம்....