கவிதைகள்
கவிஞன் என்பவன் பிறப்பதில்லை.
உருவாக்கப்படுபவனும் இல்லை
தானாக உருவாக்கப்படுகின்றான்.
ஆற்றலைக் காட்டிலும் ஆர்வமே வெற்றிக்கு
அடிப்படைக் காரணம்.
நல்ல செயலுக்கு வடிவான வட்டி கிடைக்கும்.
அதிஸ்டத்தை ஒரு போதும் நம்பாதே.
அது உன்னை சோம்பேறி ஆக்கும்.
ஒழுக்கம் என்பது வெள்ளைக் காகிதம் போன்றது.
ஒரு முறை கறை பட்டால் மறுபடியும் பழைய நிலைக்கு
கொண்டு வர முடியாது.
அளவற்ற ஆசைகள் எமது நட் குணங்களை அழித்துவிடும்.
அறிவின்மை கேவலம் அதை விட கேவலம் அறிய மனமின்மை.
மௌனம் இருக்கும் இடத்தில் அமைதி என்ற கனி இருக்கும்.
உயர்ந்த பண்பிற்கு இலக்கணம் சிறு சிறு தியாகங்கள்.
அறியாமையிலிருந்தே பயம் தோன்றுகின்றது.
விடா முயற்சியே வெற்றிக்கு வழி.
உண்மையும் உழைப்பும் சேரும் போது வெற்றிகள் வாசல் கதவைத் தட்டும்.
உன் இலட்சியத்தை விட அதை அடையும் வழி முக்கியம்.
உன் முகம் அழகாக இருக்க கோபத்தை இழந்து விடு.
உண்மை பேசுபவன் இடத்தில் ஆண்டவன் அருகில் நிற்கிறான்.
விளையாட்டு உள்ளத்தை பன் படுத்துகிறது.