துளிப்பாக்கள்

மேசையில்
கோப்புகள் தேக்கமில்லை
நெம்பித் தள்ளியது லஞ்சப்பணம் !!!
‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡
கிழிந்து கிடந்தது பூமி
வந்து தைத்தது
வான் மழை !!!
‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡
கர்ண கடூரக் குரல்
வென்றது பரிசு
பின்பாட்டுக்காரன் !!!
‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡
தூக்க மாத்திரைகளை
வலுவிழக்க செய்துவிட்டது
வலிகள் !!!
‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡
நேர்மை தண்டனைக் குழியில்
குற்றவாளி வீட்டு விருந்தில்
(கெ)கட்ட பஞ்சாயத்து !!!
‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡
அறுவை சிகிச்சையின்றி
கண், காது, மூக்கு ஒட்டவைப்பு
புரளி / வதந்தி
‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡