எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள் -கடைசி பாகம் -கவிஜி

"ஹெலோ முகமூடி.. எதுக்குப்பா இங்க அடைச்சு வைச்சிருக்க....." என்று சியாமளா.... கேட்க.. இன்னொரு குரல் அருகினில் இருப்பதை உணராத மற்றொரு குரலாய் வித்யாவும் "ஹெலோ யார்டா நீ....." என்று கத்த... பக்கத்தில் செந்தேள்... "இப்போ லைட்ட போடறியா, இல்லையாடா..... ?"என்று இன்னும் வேகமாய் கத்த... மற்றவர்களும் அவரவர் கோபத்தில் கத்திக் கொண்டிருக்க .... "அட இங்க இன்னும் நிறைய பேர் இருக்கீங்களா" என்று ஆரம்பித்த ....... ராம் வசந்த்.. "இருங்க இருங்க.. கொஞ்சம் சத்தம் போடாம இருங்க.. யார் என்னனு கேப்போம்.." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சரவணா சிரிக்கத் தொடங்கினார்.....
கூச்சல், குழப்பம், சலசலப்பு ஒன்றும் புரியாமல் இருட்டுக்குள் மௌனமாய் விழித்தன....ஒவ்வொருவருமே தன் பக்கத்தில் யாரோ இருப்பதை உணர்ந்து, புது குழப்பத்துக்குள் போனார்கள்....
சிரிப்பு சத்தத்தை.... அடக்க, சந்தோஷ் எவ்வளவோ முயன்றும்..... முடியாமல் அவரும் சிரிக்க... கூட கார்த்திக்காவும் சிரிக்க........
"யார்டா இது....... பேய் வீட்டுக்குள்ள இருட்டு மாதிரி... என்று கேட்டபடியே சாந்தி கொந்தளிக்க.........
"இப்போ லைட்ட போடல.. கைல இருக்கிற துப்பாக்கியால சுட்டுட்டு போயிட்டே இருப்பேன்" என்று ரம்யா கத்த......
"ஆமா, உனக்கு முதல்ல தோசை சுட தெரியுமா...? என்று மீண்டும் சரவணா கலாய்க்க........
"வேளாங்கண்ணியும் புனிதாவும்......... இது ஏதோ டெர்ரரிஸ்ட் போல என்று கிசுகிசுத்தபடியே... உங்களுக்கு என்ன வேணும்னு சொன்னீங்கனா.. பேசி தீத்துக்கலாம்.. என்று கூற........
"ஏங்க நிஜமாவே துப்பாக்கி வச்சிருக்கீங்களா......!" என்று பம்மியபடியே பிரவீன் ஷீஜா, ரம்யாவின் காதுக்குள் கிசுகிசுக்க....
"அயே இவுங்கள பார்த்தா ஏதோ டம்மி பீசு மாரி இருக்கு.... நீங்க வேற.... டேய் முகமூடி தில் இருந்தா ஒத்தைக்கு ஒத்தை வாடா... பாக்கலாம்" என்று... பிரவீன்க்கு இந்த பக்கம் அமர்ந்திருந்த ப்ரியா கத்த.......
"அண்ணே.... விஷயத்த சொல்லுங்க.. எதுக்கு கடத்திட்டு வந்தீங்க..." என்று பொறுமையான குரலில் ராஜ்குமார் கேட்க....
"அட ப்ரோ.... நீங்க வேற.. எதுக்கு இவ்ளோ அமைதியா கேக்கறீங்க" என்ற கிருத்திகா... "நீங்க யாரு, என்ன எல்லாம் எனக்கு தெரியும் ... ஆனா உங்களுக்கு வளைஞ்சு கொடுக்க மாட்டோம்.." என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போதே.....
"பார்ட்னெர் லைட்ட போட்ருங்க.. பயபுள்ளைக... இனி தாங்காது" என்று சிரித்துக் கொண்டே,, சரவணா சொல்ல.......
லைட் போடப் பட்டது.........
கண்களை தேய்த்தபடியே அனைவரும் திக் கென்று உணர்ந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.... ஒவ்வொருவரின் பார்வையிலும் ஆச்சரியம் கலந்த மனக் கிளர்ச்சி..... சுருங்கிய புருவங்களில் விரிந்தன... தோழமை நெஞ்சங்கள்........
முன்னால் நின்ற மூன்று முகமூடிகளும் தங்கள் முகமூடியைக் கழற்றினார்கள்.........
அனைவரும் கண்கள் விரிய அட..... சரவணா.. சந்தோஷ்...... இந்த புள்ள யார்...... என்று யோசிக்கும் போதே.......
அந்த புள்ளயே, " நான்தான் கார்த்திக்கா... மூன்றாவது முகமூடி..." என்று கம்பீரக் குரலில் சொல்லி தன்னையே கலாய்த்துக் கொண்டது......
மூன்று பேரும் மாறி மாறி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சிரிக்கத் தொடங்கினார்கள்...
ஒவ்வொருவருவும் ஒவ்வொருவரிடமும் அறிமுகப் படுத்திக் கொண்டார்கள்... பல நாட்கள் எழுத்து மூலமாகவும்.. அலைபேசி மூலமாகவும் மட்டுமே பேசிக் கொண்டும், பழகிக் கொண்டும் இருந்த அத்தனை எழுத்தாளர்களும் இப்போது ஒருவரையொருவர்.. பார்த்தும்.. கை கொடுத்தும்... அன்பை, பாசத்தை பரிமாறிக் கொள்ள...........
"இதுக்கு தான், இப்டி எல்லாரும் ஒன்னு சேரணும்னு தான் இந்த கடத்தல் நாடகம்... எல்லாரையும் ஒண்ணு சேக்கணும்னு எத்தன நாள் திட்டம் போட்டோம்.. எப்டி போட்டாலும் யாராது ஒருத்தர் ஏதாது காரணம் சொல்லி வராம போய்டறீங்க... அதான்....எறும்புக் கதைய காரணமா வைச்சு உங்கள இங்க கடத்திட்டு வர நம்ம கவிஜி போட்ட திட்டம் தான்....இது...... அத சந்தோஷ், செயல்படுத்த நாங்க உதவி பண்ணினோம்....." என்று சரவணாவும் கார்த்திக்காவும் சிரித்துக் கொண்டே கூற...."ஆனா அதுக்காக மட்டும் இல்ல..." இன்னும் ஒரு காரணம் இருக்கு.... பொறுமையா கவனிங்க.." என்றபடியே... முன்னால் இருந்த திரையை சந்தோஷ் விலக்கினார்.......
அது ஒரு கலையரங்கம்.....
முன்னே, மக்கள் திரண்டு அமர்ந்திருந்தார்கள்.......அப்போதுதான்.... தாங்கள் வரிசையாக மேடையில் அமர வைக்கப்பட்டிருக்கிறோம் என்று எழுத்தாளர்கள் உணர்ந்தார்கள்...
"அட என்னப்பா... கொஞ்ச நேரத்துல கதைய கலங்க வைச்சிட்டீங்க....." என்றபடியே செல்லமாக சந்தோஷையும் சரவணாவையும்.. கார்த்திக்காவையும் முறைத்தார்கள்.........
"இதெல்லாம் ...... எழுத்தாளர் வாழ்கையில சகஜமப்பா...." என்று சரவணா மொக்கை போட... "நீ தான் அந்த சரோவா...... நான் கூட ஏதோ புள்ளைன்னு நினைச்சிட்டேன்...." என்று சியாமளா பதிலுக்கு காலை வாரி விட்டார்.....
அனைவரும், பெரும் ஆவலுடன் என்ன நடக்க போகிறது என்று கவனிக்கத் தொடங்கினார்கள்.. அவர்கள் மூவரும் அவர்களோடு வரிசையில் அமர........
ஜீவா.. கமலி, சூர்யா, சரஸ்வதி, குழந்தை சத்யா... ஆனந்தி , திவ்யா....அனைவரும்....இப்போது மேடை ஏறத் தொடங்கினார்கள்...
ஆங்காங்கே கவனம் சிதறிக் கொண்டிருந்த மக்கள் கூட்டம்.. மெல்ல மெல்ல ஆரவாரத்தை குறைத்துக் கொண்டே......... மேடையில் பேசுவதைக் கவனிக்கத் தொடங்கியது......... மெல்ல மெல்ல....... மெல்ல.... ஒவ்வொருவரின் குரலும் குறைந்து பின்,- பின் டிராப் சைலண்ட் ஆனது...........
"எல்லாருக்கும்... வணக்கம்.... இங்க மேடைல உக்காந்திருக்கும் இந்த 15 பேரும்.... எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள் கதையை எழுதிய எழுத்தாளர்கள்.... உங்கள்ல பல பேர் இந்தக் கதையப் படிச்சிருக்கலாம்....... இது வெறும் கதை இல்ல..... எங்க வாழ்க்கை....... இந்த கதை புத்தகமா ஆன பின்னாலதான்.... இந்த சமூகத்தில எங்களுக்கான இடம், ஆழமாக இடம் பெறத் தொடங்குச்சுன்னு சொன்னா அது மிகை இல்ல......"
மக்கள் கூட்டம் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியது..... சம்பிரதாய வணக்கம்... வாழ்த்து எதுவுமில்லாமல் சட்டென விஷயத்துக்கு போனது கூட அவர்களை சட்டென கூர்ந்து கவனிக்க வைத்திருக்கலாம்..........
ஒண்ணுமே இல்லாத கதையைக் கூட திரைக்கதையால ஜெயிக்க வெச்சிட முடியும்....ஆனா அதே சமயம்.. நல்ல கதைகள் கூட மோசமான திரைக்கதையால தோத்து போயிருக்கு.....அதும் இந்த எறும்புக் கதை செம கதை..... அப்போ செமையான திரைக்கதையும் சேர்ந்தா இன்னும் செமையா இருக்கும்ல.. அதான்... கவிஜி கூட சேர்ந்து இப்டி ஒரு திரைக்கதை அமைக்க கேட்டுக்கிட்டோம்...."
கூட்டம் புரிந்தும் புரியாமலும் கை தட்டியது.. எப்பவும் போல....
"இந்த எறும்புக் கதைதான் எங்க வாழ்க்கையில நிறைய மாற்றத்தை ஏற்படுத்துச்சு,....அந்தக் கதையோட 1 லட்சம் பிரதி விற்பனைக்கு ஒரு விழா எடுக்க நாங்க திட்டமிட்டோம்....அத கவிஜியிடம் கேட்ட போது அவரும் ஒப்புக் கொண்டார்.... கதையை எழுதின எல்லா எழுத்தாளர்களும் இங்கு வந்து சிறப்பித்தால் விழா இன்னும் நல்லா இருக்கும்னு சொன்னோம்...." சரி.... அவர்களை அழைத்து வர வேண்டியது தன் பொறுப்பு" என்று கூறினார்.."
"அழைச்சிட்டாயா வந்தீங்க...." என்று ராம் வசந்த் முணு முணுக்க,, "விடுன்னே விடுன்னே"....... என்பது போல சரவணா பார்க்க....
"சொன்னபடியே எல்லாரையும் அழைச்சிட்டு வந்து எங்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடிச்ச கவிஜி அவர்களுக்கு எங்கள் நன்றியை செலுத்தறோம்...." என்றபடியே கொஞ்சம் பின்னால் திரும்பி மேடையில் அமர்ந்திருந்த அனனவரையும் பார்த்து நன்றி சொல்வது போல தலையை சற்று தாழ்த்தினார் ஜீவா...
"ஆமா.. சந்தோஷ் அண்ணா........ எல்லாரும் இருக்கோம்.. கவிஜி எங்க....?" என்று வித்யா மெல்ல கேட்க.... அப்போது தான் நினைவு வந்தவர்களாக, அனைவரும் கிசு கிசுத்த படி கேட்டார்கள்.........
"எங்க.... கவிஜிய காணோம்னு தான கேக்கறீங்க... அவர் ரெடி ஆகிட்டிருக்கார்.... இப்போ வந்துருவார்...." என்ற ஜீவா மீண்டும் மக்களைப் பார்த்து பேச்சைத் தொடர்ந்தார்....
"ரெடியா......?" என்று ஒன்றும் புரியாமல் அதற்கு மேல் அங்கு விளக்கம் கேட்கவும் முடியாமல் பேச்சை கவனிக்கத் தொடங்கினார்கள்.. எழுத்தாளர்கள்....
"இந்த எறும்புக் கதை புத்தகமான பின்னால நிறைய மாற்றங்கள் எங்கள் வாழ்கையில நடந்துச்சு...மக்கள், எங்கள வேற மாரி பாக்க ஆரம்பிச்சாங்க.... எங்கள மதிக்க ஆரம்பிச்சாங்க.... ரேஷன் கார்ட் கிடைச்சது... அப்ளிகேஷன் பார்ம்ல ஆண்- பெண்ணுக்கு அப்புறம் - திருநங்கைன்னு இடம் கிடைச்சது..... நாங்க இப்போ பாலியல் தொழில் செய்றதில்ல.... அதீத ஒப்பனை பண்ணிக்கறது இல்ல... கை தட்டி காசு கேக்கறது இல்ல... பிச்சை எடுக்கறது இல்ல..கிடைச்ச வேலைக்கு போறோம்...எங்கள நம்பி நிறைய பேர் வேலை தராங்க..... இன்னும் ஆங்காங்க சில கொலைகள் நடக்குதுன்னு பேப்பர்ல படிக்கறோம்..... ஆனா அதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது....... ...."
"எந்த சுவாரஷ்யமும் இல்லாம இடைவேளை விட்டா அந்த படம் எப்டி இருக்கும்....? அப்டி நம்ம கதை இருக்கக் கூடாது அப்டீங்கறதுக்காகத்தான்... உங்கள எல்லாம் கடத்தின நாடகம்..... கண்டிப்பா கோபம் இருக்கும்....மன்னிச்சுக்கோங்க.... ஒரு சின்ன வேலை.. இப்போ வந்தறேன்.... நீங்க பேச்சை கவனிங்க..." என்றபடி ஒரு குறுஞ்செய்தியை அனைவருக்கும் தட்டி விட்டிருந்தார் கவிஜி
அனைவரும் படித்துக் கொண்டு, புன்முறுவலுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்... அர்த்தத்தோடு.....
"நாங்க அகிம்சை வழிய தேர்ந்தெடுத்திட்டோம்.... பண்ணின தப்புக்கு தண்டனை வாங்கியாச்சு.. இப்போ சாதாரண வாழ்க்கைக்கு திரும்பிட்டோம்..... எங்க வீடல் எங்கள சேர்த்துக்கிட்டாங்க.... சமுதாயத்துல ஒரு அங்கீகாரம் கிடைச்சிருக்கு...அங்கங்க சில பேர் ஆண்களிலும் பெண்களிலும் தவறு செய்யறவங்கள போல எங்கள்லையும் தவறு செய்யற ஆட்கள் இருக்கத்தான் செய்யறாங்க... ஆனால் அதை வைச்சிக்கிட்டு, இனி திருநங்கைகளே மோசம்ங்கற முடிவுக்கு யாரும் வர மாட்டாங்க. எல்லாம் எறும்புக் கதை செஞ்ச மாயம்........"-என்றபடியே மீண்டும் திரும்பி எழுத்தாளர்களைப் பார்த்து கை கூப்பினார் ஜீவா..... மக்கள் கூட்டம் மறுபடியும் கை தட்டியது, அரங்கம் எதிரொலிக்க......
"பாடத்தோடு நிற்காமல் நிறைய இலக்கியங்கள் படிக்கறோம்.. உள்ளூர் இலக்கியம் முதல் உலக இலக்கியம் வரை படிப்பது, அறிவுக் கண் திறக்கும்னு நம்பறோம்....திருவள்ளுவரையும்... பாரதியையும் படிக்கறோம்.....பாரதி தாசனையும்.....வண்ண தாசனையும் படிக்கறோம்....
தமிழன்பன் மூலமா.... நெருடாவ தெரிஞ்சுகிட்டோம்.....எஸ் ரா வை படிக்கறது மூலமா.. நிறைய உலக படங்கள தெரிஞ்சுகிட்டோம்... நிறைய ஊர்களை தெரிஞ்சுகிட்டோம்.... நிறைய கலாசாரங்களை தெரிஞ்சுகிட்டோம்....... புவியரச படிக்கறது மூலமா.. தாட்சாவ்ஸ்கியை தெரிஞ்சுகிட்டோம்..... அவரோட வெண்ணிற இரவுகள்தான்...... இன்னைக்கு நாம் பாக்கற அத்தன முக்கோண காதல் கதைக்கும் பிள்ளையார் சுழி.....அசோகமித்ரன படிக்கறோம்.. ஜெயகாந்தனையும் ஜெயமோகனையும் படிக்கறோம்... சாருவ படிக்கறோம்.....டால்ஸ்டாய்....காப்ரியல் மார்க்ஸ்... கார்க்கி....இன்னும் இன்னும் நிறைய படிக்கறோம்....எல்லாருமே சொல்றது..... இன்னும் படிங்க அப்டிங்கறதுதான்..... வாழ்க்கை... ஒண்ணுமே இல்ல.. அதுல ஏதாவது ஒண்ணையாவது விட்டுட்டு போங்கனு புரிஞ்சுக்கறோம்...அந்த புரிதலை.......இந்த எறும்புக் கதை புரிய வைச்சது.... ஒரு படத்துல அர்ஜுன் ஒரு வசனம் பேசுவார்.. ஒரு நாட்டுக்கு ஏர் முனை, பேனா முனை, போர் முனை மூணு நல்ல இருந்தா அந்த நாடு தான் வல்லரசுன்னு....... அத அனுபவ பூர்வமா புரிய வைச்சது இந்த எறும்புக் கதை....."
கூட்டம் இன்னும் காதை பிளக்கும் அளவுக்கு கைகள் தட்ட.... ஒரு சிறு இடைவெளி விட்டு மீண்டும்.... தொடர்ந்தார்....
"மிகைல் நெய்மி, ஜிப்ரான படிக்கும் போது.... ஆன்மீகமும்... காதலும் எவ்ளோ வலிமைன்னு புரிஞ்சது..... தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திட சொன்ன பாரதியின் வரியில் தீ பிடிச்ச கோபங்களை.... தீயவைகள நோக்கி திருப்பத் தூண்டியது.......
வாழ்க்கை ஒரு வட்டம் மட்டுமல்ல.. பல வட்டம்.. வட்டத்துக்குள்ள நாம இருக்கோமா இல்லையாங்கறது தான் நம்ம வாழ்க்கை... சாமியும் சாதியையும் இல்லாத சமூகம் வேணும்னா அதுக்கு நிஜமான கல்வி அவசியம்... உலகத்திலேயே கல்வில மிகப் பெரிய தரத்தை, இடத்தை வைச்சிருக்கற நாடு பின் லாண்ட்... ஆனா அங்க குழந்தையை பள்ளிகூடத்துல சேர்க்கற வயசு என்ன தெரியுமா?......" என்று ஒரு இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தார்.....
" 7..., 3 வயசுலேயே போட்டு கொல்ற வேலையெல்லாம் அங்க இல்ல....." என்றபடியே மீண்டும் பேச்சை வேறு பக்கம் திருப்பினார் ....
"எல்லாரும் உழைக்கனுங்கறத கார்ல் மார்க்ஸ்ட்ட கத்துகிட்டோம்... உடம்புங்கறது... மிகப் பெரிய பொக்கிஷம்.. அது இல்லன்னா... உயிர்க்கு வேலை இல்லங்கறத ...செல்பிஷ் ஜீன்ல படிச்சு தெரிஞ்சுகிட்டோம்.... இங்க எல்லாமே இருக்கு... மனசு மட்டும்தான் இல்ல... அது கண்ணுக்கு தெரியாத ஒண்ணுங்கறதுதான்.. அது இல்லாம போறதுக்கும் இருக்கறக்கும் வித்தியாசம் தெரியாம போறது......... மனசு பக்குவப் படணும்னா அங்க படிப்பு வேணும்.. பக்குவப்பட்ட, பண்பட்ட மனசுல இருந்து ஒம்போதுதுன்னு கூப்டற உணர்வு வராது.. அது திருநங்கைனு தான் பேசும்.. நாங்களும் கை தட்டி யாரையும் கூப்டறது இல்ல.. அவ்ளோ மாத்திருக்கு இந்த கதை......."
...................................................................................................................................!!!!!!!!!
"இந்த கதைய எழுதின 16 பேரும் ஏதோ எழுதிட்டு அப்டியே வாழ்த்த வாங்கிட்டு போறவங்க இல்லங்கறத நாங்க கவனிச்சோம்.... அவுங்களும் ஏதோ அவுங்கனால முடிஞ்சத இந்த சமூகத்துக்கு பண்ணிட்டு தான் இருக்காங்க... அவுங்க பண்ற சேவை... அவுங்களோட நியாயமான கோபம்.. தப்ப தட்டிக் கேக்கற... தைரியம்... மூட நம்பிக்கைக்கு எதிரா அவுங்க குடுக்கற குரல் எல்லாத்தையும் எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள் கதையின் மறு பதிப்பில், பிற சேர்க்கையில் இணைச்சிருக்கறோம்....நீங்களும் படிங்க.... அது வேற மாதிரி ஒரு அனுபவத்தை உங்களுக்கு தரும்..... சுட்ட நிஜத்தை... உள் வாங்கும் நிஜம் உங்களிடம் இருந்தால் நீங்களும் அந்த பாதையில பயணிக்கலாம்....புரட்சிய இனி பேசிகிட்டிருந்தா வேலைக்காகாது தோழர்களே..... செயல் படுத்தணும்.... இன்னும் எத்தன நாளைக்கு சாதி மதம்னு... பிரிச்சு பிரிச்சு பாக்கறது.... அடிச்சிகிட்டு சாகறது.....? வாழ்க்கை ஒரு தரம்தான... ஏன் புரிஞ்சு வாழ்வோமே...?"
.......................................................................................................................................!!!!!!
சாதி ஒழியனும்னா.. கலப்பு திருமணங்களும்.. பள்ளி கூடத்துல சாதி கேட்காத அட்மிசன்களும் அவசியம்..அது மாதிரி நாங்களும் உங்கள்ல ஒருத்தங்க தான்னு ஏத்துக்கனும்னா... நமக்குள்ளேயும் கலப்பு திருமணங்கள் அவசியம்..... முதல்ல இத கலப்பு திருமணம்னு சொல்றதே தப்புன்னு பெரியார் சொல்வார்... மிருகத்தோடயா கல்யாணம் பண்ணிக்கறோம்.. கலப்பு திருமணம்னு சொல்றதுக்கு.... மனுசனும் மனுசனும் கல்யாணம் பண்ணிகறத எப்டி கலப்பு திருமணம்னு சொல்றது.. இருந்தாலும் அப்படியே சொல்லி பழகிட்டோம்ல.. ஒரு அடையாளத்துக்கு சொல்றேன்.... திருநங்கைகள காதலிச்சு ஏமாத்தற கூட்டமும் இருக்கு... அவன் பாவம் நல்லா இருக்கட்டும்னு ஒதுங்கி போற திருநங்கை கூட்டமும் இருக்கு... ஏன் திருநங்கைய கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லா இருக்க முடியாதா.....?........இங்க அப்டி ஒரு புரட்சி தீ எறியப் போகுது....."
கூட்டம் இன்னும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியது.... மேடையில் அமர்ந்திருந்தவர்களும்.... என்ன நடக்க போகிறதோ என்று யோசித்துக் கொண்டிருக்க... மீண்டும் ஜீவா பேசத் தொடங்கினார்....
எறும்பு கதையின் தொடர்ச்சியாக ..... உங்க கவிஜிக்கும் எங்களில் ஒருத்தியான திருநங்கை ....சாவித்திரிக்கும்.. இந்த மேடைல... நீதிபதி மைக்கேல் ராணி அவர்கள் முன்னிலையில் இப்போ திருமணம் நடக்க போகுது...... ..
மக்கள் சட்டென்று இன்னும் ஆழமான அமைதிக்கு சென்று..... மீண்டும் மூச்சு வந்தது போல.. ஹே வென கத்தத் தொடங்கினார்கள்.....
மேடையில் அமர்ந்திருந்த சக எழுத்தாளர்கள்... சிலை போல கண்கள் விரிய பார்த்து,பின் மெல்ல மெல்ல நிதானத்துக்கு வந்தார்கள்.. அனைவரும் சற்று கணத்தில் நிஜத்தை உள் வாங்கிக் கொண்டு கை தட்டி ஆரவாரப் படுத்தினார்கள்....
"கவிஜிக்கு வாழ்த்துக்கள்" என்று கத்தினார்கள் அனைவரும்.....
"ஜி சூப்பர்" என்று கத்திய சரவணா, விசில் அடித்து கொண்டாடினார்.... சந்தோஷ் இரு கைகளையும் ஆட்டி ஆட்டி ..... "குட் குட்..." என்பது போல கூட்டத்தை பார்த்து உற்சாகமூட்டினார்... அனைவரும் எழுந்து நின்று கை தட்டினார்கள்.........
"இவுங்க ரெண்டு பேரும்.. எறும்புக் கதை எழுதற நேரத்தில ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சு நட்பாகி, காதலாகி, இதோ இன்று கதையை எழுதிய உங்க முன்னால சீர்திருத்த திருமணமும் செஞ்சுக்க போறாங்க.......... அதுக்காக, கவிஜியைப் போல எல்லாரும் திருநங்கைகளை திருமணம் செஞ்சுக்கோங்கன்னு உபதேசிக்கல.... அப்படி ஒரு சூழ்நிலை வந்தா... வீடு.... நட்புன்னு ... சிந்தனையை முடக்கிக்காம.. கொஞ்சம் பரந்த விரிஞ்ச யோசனையில்.... தைரியமாக திருமணம் செய்ய முன்னால வாங்க...சமூகங்கறது நீங்க தான்.... ஒரு உயிருக்கு வாழ்க்கை தர்றது எப்பவும் குற்றமாகாது...... ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணுமே பிடிச்சா கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழலாங்கும் போது தங்களை பெண்களாகவே உணர்ந்து வாழ்ற திருநங்கைகளை திருமணம் செய்றதுல தவறொன்னு இல்லை தோழர்களே.....எந்த சாமியும் வந்து கண்ணக் குத்தாது...... ஒரு வேலை இருந்தால் வாழ்த்திட்டு தான் போகும்.... காதலுக்கு எதுவுமே தெரியாது.. அது மனச மட்டுந்தான் பார்க்கும்...... மறுபடியும் சொல்றேன்...கவிஜியைப் போல எல்லாரையும் திருநங்கைகளை கல்யாணம் செஞ்சுக்க சொல்லல..... காதல் வருமாயின்.. தவறில்லை...... காதலிச்சு ஏமாத்தறது யாருக்கும் வலியான ஒன்னு தான் ... அது எங்களுக்கும் பொருந்தும்....காதல்ல எல்லாமே சாத்தியம் தோழர்களே..... வாழ்த்துவோம்......அதுமட்டுமல்லாம.... இன்னைக்கே தம்பதிங்க ஒரு அநாதை குழந்தையை தத்தெடுக்கும் நிகழ்வும் இங்க அரங்கேறப் போகுது........"
ஜீவா பேசிக் கொண்டிருக்கும் போதே...... மணப்பெண்.... சாவித்திரி... மேடை ஏற..... மக்கள் எழுந்து நின்று கை தட்டி வரவேற்றார்கள்.......
இப்போது மேடைக்கு பின் புறம் இருந்த அறைக்குள் இருந்து வேகமாக வெளியேறிய கவிஜி வெள்ளை சட்டை வெள்ளை வேட்டியில் மணவாளனாக மேடை நோக்கி வீறு நடை போட.. அனைவரும் கை தட்டி வரவேற்றார்கள்.......
மேடைக்கு கீழ இறங்கி வந்த சரவணாவும் சந்தோஷும்... கவிஜியை ஆரத் தழுவி தங்கள் வாழ்த்துக்களை சொல்லி, மேடைக்கு அழைத்து போனார்கள்....... மக்கள், மங்கள வாத்தியத்தை கை தட்டலில் காட்ட... மேடையில் அமர்ந்திருந்த அனைவரும் வாழ்த்த......
கவிஜியும்.... சாவித்ரியும்..................மாலை மாற்றினார்கள்.......................
சற்று நேரத்துக்கு முன்னால்.....
அறைக்குள் ஒருவனின் கழுத்தை கர கரவென கத்தியால் அறுத்துக் கொண்டே...... "எப்டிடா.. மூணு வயசு குழந்தைய நாசம் பண்ண மனசு வருது.... கேட்டா நீ சிறுவன்.. இல்லையா..... ஜாலியா தலைய தொங்க போட்டுகிட்டே... வீட்டுக்கு போய்டுவா.. இல்ல..."- அவன் துடிக்க துடிக்க இன்னும் வேகமாய் அறுத்துக் கொண்டே கேட்டான் கவிஜி....
மழை நின்றிருந்தது......
ஒரு சிறிய இடைவேளைக்கு பின் எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள் மீண்டும் தொடரும்......
கவிஜி
இந்தக் கதைக்கு ஆதரவு அளித்த நல் உள்ளங்களுக்கு எங்கள் எழுத்தாளர்கள் 15 பேரின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..... மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இக் கதை தொடரும் என்றே நம்புகிறேன்..... நன்றி......