சாலையோர மனிதன்
சாலையோரம் தூங்கும் மனிதன்
எந்த சலனமும் இன்றி எந்தக் கவலையும் இன்றி
முழு உடம்பும் மூடிய படி மரக் கட்டை போல்
படுத்துத் தூங்குகிறான்
வீதியில் வாகனங்களின் இரைச்சல்
அவை கிளப்பும் புழுதி புகை சூடு
எதுமே பொருட்படுத்தாது நிம்மதியுடன் தூங்குகிறான்
உண்ட மயக்கம் வேலைப் பளு அலுப்பு எல்லாமும்
அவனை இத்தகைய படுக்கைக்கு தள்ளுகிறது
இவர்களும் மனிதர்கள்தான்
ஏன் இந்த அவல நிலை இவர்களுக்கு
சொந்தம் பந்தம் ஆயிரம் இருந்தும் இந்த நிலை ஏன் /
பணம் சம்பாதிக்க குடும்பத்தைப் பாதுகாக்க
அன்றாட கூலியாக அல்லும் பகலும் உழைத்து
அவன் தன் நிம்மதியைத் துலைத்து
சுகம் சுத்தம் ஓய்வு சந்தோசம் எதுவும் இன்றி
ஓடாய் தேய்கிறான் இதனால்
இவன் தன்னை தியாகம் பண்ணுகிறான்
இவன் எந்த ஊரோ எந்த நாடோ மனிதனா/ இல்லை மிருகமா/
மனிதன் சற்று சிந்திக்க வேண்டும்
இது அவன் செய்யும் குற்றமா
அவனை சேர்ந்தவர்கள் செய்யும் குற்றமா
அரசு செய்யும் குற்றமா/ அதிகாராம் செய்யும் குற்றமா/
அனைவரும் மதிக்கப் பட வேண்டியவர்கள்
அவர்களை வெறும் எந்திரம் ஆக நினைப்பதால்
அவர்கள் மக்களிடம் இருந்து வேறு படுத்தப் படுகிறார்கள்
ஒவ்வொரு மனிதனும் தன்னை நேசிக்கப் பழக வேண்டும்
தன்னை நேசிப்பது போல் அடுத்தவனையும் நேசித்தால்
இதை எல்லாம் மாற்ற முடியும், மாற முடியும் .
அவர்களும்மனிதர் என்கின்ற எண்ணம்
அவர்களுக்கு வர வேண்டும்
மனித வாழ்கையில் மனிதன் மனிதன் ஆக வாழ வேண்டும்
பணம் தேடி கொள்ள உழைப்பு முக்கியம்
ஆனால் தன்னை தன் வாழ்கையை இழந்து விட்டால்
மீண்டும் தேடிக் கொள்ள முடியாது
வாழ்கை ஒரு முறைதான்
அதை அனுபவித்து வாழ வேண்டும்
அழகான வாழ்க்கையை ஆனந்தமாய் வாழ
கற்றிடுவோம் கற்றுக் கொடுப்போம்