தன்னம்பிக்கை

அழகாக சொல்கிறேன்;
அன்பாக சொல்கிறேன்;

உள்ளம் சிவந்தவர்கள்;
உத்தமனாய் உள்ளவர்கள்;

உங்களை தவிர யாரு இருக்கிறார்கள்?
உண்மைகளை உணர்ந்திடுவார்கள்;

சரித்திர வரலாறு படைத்திடுவார்கள்;
சத்தம் போட்டு கொண்டாடும் தமிழர்கள்!

தானாக வந்தவர்கள் யாரும் இல்லை;
தியாகியாக தகுதி தேவை இல்லை!

தலைகனம் உங்களிடம் இல்லாத ஒன்று;
தன்னடக்கம் உங்களின் ஒற்றுமையில் உண்டு!

தீயாக மூண்ட ரசிகர்களின் போர் போதும் ;
திருப்பம் தந்திட இருவரும் வாரும்!

நீ அவருக்கும் ; அவர் உனக்கும்
நிகர் உள்ள தராசு ! நிசம் தானா மனசு?

தந்தை தூக்கிவிட்டவரெல்லாம் ஞானம் இழந்தவரில்லை!
தானாக துளிர்விட்டதெல்லாம் வானம் தொட்டதில்லை!

நீங்கள் இருவரும் இங்குள்ள பலரின் கிழக்கு;
நித்தம் நாங்கள் அறிவோம் இதற்க்கு விதிவிலக்கு!

உங்கள் ஆணைக்கு காத்திருக்கும் எத்தனையோ கைகளாய்...
உங்களின் உழைப்புக்கு காரணமான தன்னம்பிக்கை!!!
-உயிரவன்

எழுதியவர் : உயிரவன் (23-Nov-14, 1:05 am)
சேர்த்தது : அகமது நசீர்.அ
Tanglish : thannambikkai
பார்வை : 196

மேலே