தேடும் கண்கள்

அன்று நெருங்கி நின்று கொண்டிருந்த
எங்களது நட்பிற்கு
இன்று இடைவெளிகள் ஏராளம்
வேலைதான் காரணம் என்கிறார்கள்
வேலை இல்லாததுதான் காரணம் என்கிறேன்
உங்களை கர்ணனாக இருக்க வேண்டவில்லை
காண்டக்ட்-இல் இருக்கவே வேண்டுகிறேன்
இவ்வரிகள் என் எண்ணத்தின் குறைபாடா
என்னை நீ எண்ணாமல் விட்டதன் வெளிப்பாடா
இருந்தாலும் 'நட்பு' சொல்லுகின்றது
என்னைத் தேடும் கண்களை
என் கண்களும் தேடும் என்று......

எழுதியவர் : RAJASEKAR (23-Nov-14, 8:02 am)
சேர்த்தது : இரா இராஜசேகர்
Tanglish : thedum kangal
பார்வை : 126

மேலே