சாக்கடை மலர்கள்
தேன் சொட்டும் இதழ்கள்
அனலூட்டும் உடல்
இவற்றை தவிர
என்ன தெரியும் உங்களுக்கு
இன்னொன்று தெரியும்
இவள் வேசி என
நிர்வாணப்படுத்த
எங்கள் கனவுகளை
எங்கள் கண்ணீரை
எங்கள் உணர்வுகளை
உணர்ந்ததுண்டா
அந்தரங்க உறுப்புகளை
ஆவலோடு தழுவிய
அதே உங்கள் விரல்
அசிங்கமென
சுட்டுவிரல் நீட்டுகிறது
யார் அசிங்கம்
எட்டடி தள்ளி நின்றாலும்
எட்டி பார்க்கும் உங்கள் கண்கள்
கதை படங்களை விட
சதை படங்களை ரசிக்கும் உங்கள் ரசனை
கூட்ட நெரிசலில்
உறசத்துடிக்கும் உங்கள் உடல்கள்
நன்றாக தெரியும்
உங்கள் நியாயங்கள்
எங்களை நியயப்படுத்தா தென
சமாதான படுத்த வேண்டாம்
எழுத்து பிழை நிறைந்த
எங்களின் தலையெழுத்தை
திருத்தவும் வேண்டாம்
சதைக்குள் மண்டிக்கிடக்கும்
மனதை
பெண்மையை
உணருங்கள்
அது போதும் ,,,,,,,