நடுநிசி

நண்பர்களே கவிதையோடு சேர்ந்து ஒரு கதையும் சொல்ல போகிறேன்
இது என் புதிய முயற்சி, உங்கள் ஆதரவுடன் வாருங்கள் என்னோடு சேர்ந்தே பயணிக்கலாம்.

"கரு "

நடு இரவில் பாதையில் தனியாய் மாட்டிகொண்டு
எப்போது விடியும் என்று காத்திருக்கும் ஒருவன், அந்த இரவில் அவனுக்கு நேரிடும் சம்பவங்கள்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------



விடியலை தேடியே
மெல்லமாய் நகரும்
இந்த
மௌனமான இரவு
விடையறியா விடுகதையானது

எங்கே போவது
இந்த
ஒருவழிப்பாதையில்

எதை
நான் தேடுவது
இருண்ட பூமியில்

கள்வர்கள் உண்டு - ஆனால்
களவாட
என்னிடமோ
பொண்ணுமில்லை
ஒரு பொருளுமில்லை
ஆதலால்
பயமின்றி நடக்கிறேன்
கொள்ளையாட
என்னிடம்
என்னையன்றி
வேறொன்றுமில்லை

இதோ !

வேகமாய் ஒருவன்
என்னை நோக்கி வருகிறான்

அவன்
வியர்வையால் முகம் கழுவி
பயமெனும்
போர்வையை முகத்தில் போர்த்து

சிறுத்தையின் வாயிலிருந்து
சிக்காமல்
சிதறி ஓடும்
மானை விட வேகமாய்
ஓடி வருகிறான்

அய்யோ !
பாவம் யாரிந்த மனிதன்
தடுக்கி விழுந்து
தசைகள் கிழிந்து
தடுமாற்றமடைந்து
வலியின் வேதனையில்
வழியில் என்னைக்கண்டு
உதவி நாடி வருகிறானோ
என்றெண்ணி
உதவிக்கரம் நீட்ட
பக்கம் போனேன்

அவன் சொன்ன கதை கேட்டு
மறுநொடி நானும்
பயந்தே போனேன் ....

தொடரும் .....................
என்ன சொன்னான் என்று
அடுத்த தொடரில் சொல்கிறேன்

காத்திருங்கள்
அன்புடன்
ஏனோக் நெஹும்.

எழுதியவர் : ஏனோக் நெஹும் (24-Nov-14, 5:35 pm)
Tanglish : nadunisi
பார்வை : 177

மேலே