மறுநாளும் அதே நான்

மறு நாளும் அதே நான்
காலை:

உன் முகம் பார்க்க
முன் அனுமதி கேட்டு,
உன் நிழலில் நிற்க
சின்னதாய் இடம் கேட்டு,

காலக் கடவுளுக்கு
கருணை மனு போட்டு,
கண் பார்வை தேயும் வரை உன்னைத்
தேடிடும் தருணம்...

பகல்:

விழிகள் நான்கும்
நேர்க்கோட்டில் விளையாட,
உன் மொழிகள் மட்டும்
மவுனத்தோடு உறவாட,

காரனம் புரியாமல் என் புன்னகையும்
நிறம் மாறும்,
காரணம் தெரியும் வரை கால்களும்
நகர மறுக்கும்...


மாலை:

பொங்கி வரும்
வயிற்றுப் பசியை
உன் நினைவு திண்று
நான் அடக்க,

மங்கி வரும் மாலைப்
பொழுதும்
என் அமைதியின் அலறல்
கேட்டே அடங்கிப் போகும்..

இரவு:

உன் மவுனம் வெட்டிய
இதயக் குழிகளை
விழிகளின் ஈரம் நிரப்பும் நேரம்..

என்
சோக உளறலுக்கும்,
கோப உறுமலுக்கும்,
உருவம் தந்த உன் பெயருக்கு.
இதயம் இறுதியாய் இறுதி அஞ்சலி நடத்த,
இனி உறவே வேண்டாம் என்று தான்
உறுதியாய் உறங்கப் போகிறேன்,

ஆனால்,
உறங்காமலே விழிக்கும்
மறு நாளும், அதே நான்.
காலக் கடவுளுக்கு கருணை மனுவோடு.......................

என்றென்றும் அன்புடன்
சி.ஷாமினி.

எழுதியவர் : சி.ஷாமினி... (24-Nov-14, 7:20 pm)
பார்வை : 63

மேலே