உன் தவறிய அழைப்புகள்...!!!

கைபேசியை வீட்டில் மறந்து
வைத்துவிட்டு
பாதி வழியில் உன் நினைவு வர
அடித்து பிடித்து
அவசர அவசரமாய் திரும்பி
வீட்டிற்கு வருவதற்குள்,

உன் பெயரில் வந்திருந்த எண்ணற்ற
அழைப்புகளை
பார்த்துவிட்டு
நீ பேச இருந்த அன்பான
வார்த்தைகள் எதையுமே
கேட்கமுடியாமல் அவைகள்
அனைத்தும்
குருஞ்செய்திகளாய் மாறி இருப்பதை
படிக்கும் தருணங்களில்,
தாலாட்டை பாட முடியாத
ஊமைத் தாயின் மடியில் தவழும்
சிறு குழந்தையாய் உணர்கிறேன் ...!!!

எழுதியவர் : jaisee ...!!! (7-Apr-11, 3:08 pm)
பார்வை : 6135

மேலே