நீ - இலவு காத்த கிளியல்ல

காலையில்
மொட்டை மாடியில்...

உன் - கூந்தலை
உலர்த்த வருகிறாய் ....

மதியம் வத்தல்
காயவைக்க வருகிறாய் ..

மாலையில்
காற்று வாங்க
வருகிறாய் ..

இப்படி
வந்து வந்து போவதால்
வளர்ந்திடுமா காதல்?

ஒரு பார்வை ..
ஒரு வார்த்தை ...
ஒரு கண்ணசைவு ...

இவற்றில்
ஏதாவது ஒன்று
இருந்தால்தான் -

காதல் வளரும்
கண்ணே!

சிந்தித்துப்பார் ....

நிலவுபோல்
நீயும் ..
உலாவருவதில்
ஒரு பயனுமில்லை ..

தேய்ந்து தேய்ந்து
வளர்வதைத்தவிர...

வாழ்க்கையில்
நிலவு கண்ட
பயன் என்ன?

நீ -
இலவு காத்த
கிளியல்ல ..

ஆறறிவு படைத்த
அழகுக்கிளி ...

ஏதாவது -ஒரு
முடிவை எடுத்துவிடு ---
அப்போதுதான் -

உன்
வாழ்க்கை ஒரு
வடுவாகாமல் - அழகு
வடிவுக்கு வரும் .

எழுதியவர் : மா. அருள்நம்பி (26-Nov-14, 9:49 pm)
சேர்த்தது : மா. அருள்நம்பி
பார்வை : 75

மேலே