கணவில் சொல்லும் காதல்

கணவுக் காதல்

நிலவே! உந்தன் நினைவு
நெகிழ வைக்கும் இரவு!
உறங்கிய வேளை உணர்வென வந்தாய்!
என் உலகம் நீ என்றிருக்க!


கணவில் காதல் தீபம்
ஏற்ற வந்த கணவு தேவதையே வருக!
கணவுக் காதலன் அழைக்கிறேன்!
என் கணவு நீ என!
உறங்கும் முன் உந்தன் நினைவுடன்!


நினைவில் வைத்த காதல்
அது மொத்தமாக கணவு தேவதையிடம் கூறினேன்!

காதல் உணர்த்தல்


சிந்தையில் சிவந்த உன்
முகம் என்றிருக்க,
நினைவில்லை என்றேன்!
தவறுறைத்தமைக்கு மன்னிக்கவும்!
போகும் பாதையதில்
உந்தன் பாதச்சுவடுகள்
நிறைய விரும்புகிறேன்!


என் காதல் கோட்டை இதை
ஆள வருவாயோ?
ஆள் இல்லா,
செங்கோல் அது தணித்து இருக்கிறது!


நினைவில்லை என்ற
பொழுதில் இருந்து நிழலாக
நிலவுந்தன் நினைவுகள்!
துறத்துவதை உணர்ந்தேன்!


விழி கண்டு செல்லும் வேளை
செய்வதறியா செயல்களிலும் வெற்றியே!


தொடருமோ?
எந்தன் வெற்றிகள்!
வருவாயோ
வாழ்க்கைத் துணையென?
காத்திருப்பேன் நிலவுந்தன்
வருகைக்காக!

நேரில் எப்போ சொல்வேனோ?

எழுதியவர் : சந்தோஷ் (27-Nov-14, 8:01 am)
பார்வை : 91

மேலே