கிராமத்தான்

கல்லாத கடவுளே கண்ணெதிரே நிற்கிராய்
உணவையும் மண்ணிலே மலரவைக்கிராய்
ஊருக்கும் உழைத்து நின்று உயிரையும் கொடுக்க நினைக்கிராய்
காடுமேடு கல்லொடச்சு காஞ்சியையும் குடிச்சுகிட்டு
காலத்தையும் கடத்திக் கொண்டிருக்கிராய்
ரோட்டோரம் மாடுமேச்சு குளத்தோரம் தண்ணிகாட்டி
குடும்பத்தையும் கடிக்காக்கிராய்
அழுக்கு வேடியில் ஆனந்தமாய் திரிபவனே
ஓட்ட வீட்டினில் ஓரமாய் உறங்குபவனே
குளிரெது வெயிலெதுவென்று தெரியாமல்
கடுமையாய் உழைப்பவரே
உன் இரத்தங்களை வியர்வையாய் சிந்தி
ஊராருக்கு உணவு விளைவிக்கிராய்
ஆனால் துயரத்தால் தூக்கிட்டு உறங்கிவிடுகிறீர்களே
கல்லாதவரே கற்றுக்கொள்ளுங்கள் நீர் கடவுள்
உலக உயிர்களை காப்பவர்கள் நீங்கள்
உறங்கிவிடாதீர்கள் உலகம் இருண்டுபோய் விடும்
உங்கள் நெஞ்சில் துடிப்பு வேண்டும்
துயரங்களை தூக்கியெரியும் சக்தி வேண்டும்
நீர் உயிர்வாழ வேண்டும் கிராமத்தான் மலரவேண்டும்
உங்களால்தான் உலகமே வாழ்ந்துகொண்டிருக்கிறது...

எழுதியவர் : ஆ.சத்தியபிரபு (28-Nov-14, 10:55 am)
பார்வை : 164

மேலே