ரசித்தேன்

காற்றின் இசைக்கு
தலையை ஆட்டும்
மழை...

விட்ட மழையின்
தூறல் துளி விடும்
இலை...

தேங்கிய நீரில்
குளித்துச்சிளிர்க்கும்
குருவி...

நிலவின் புருவமாய்
வளைந்து நிற்கும்
தென்னங்கீற்று...

வாயின் காற்றை
வாங்கும் குழலின்
இசை...

எழுதியவர் : சகா (சலீம் கான்) (28-Nov-14, 12:15 pm)
Tanglish : rasithen
பார்வை : 135

மேலே