நீலக்குயில் தேசம்6---ப்ரியா
முன்பகுதி சுருக்கம்:தாயிடம் தன காதலையும் அதற்கான விளக்கங்களையும் சொன்னாள் கயல்...ராஜலெட்சுமியின் பழைய கதைகளை சொல்லிக்கொண்டிருக்கிறாள் கயலின் தாய் சுசீலா...)
ராஜலெட்சுமியின் கதைகளை சொல்லும் போதே சுசீலாவின் கண்கள் மழையாய் பொழிந்தது....!
அதில் சுசி மற்றும் ராஜீ இருவரும் ஒருத்தர் மீது ஒருத்தர் வைத்திருந்த அன்பு தெள்ளத்தெளிவாய் கயலுக்கு புரிந்தது தன் அம்மாவைத்தேற்றிய கயலுக்கு தனது அத்தையை எப்படியாவது பார்க்கவேண்டும் என்ற ஆசையும் எண்ணமும் இருந்தது என்ன பண்ணலாம் என யோசித்தாள்........!
அம்மா அதன் பிறகு ஒருமுறை கூட நீங்க அத்தையை பார்க்கவில்லையா?எந்த ஒரு தொடர்பும் இல்லையா அம்மா? என்று பாசத்துடன் ஏக்கமாய்க்கேட்டாள் கயல்...?இல்லடி எந்த சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை நானும் விசாரித்துட்டுதான் இருக்கேன் எந்த தகவலும் இல்லை என்றாள்.
சரிமா விதி நம் குடும்பத்தை இப்படி ஆக்கிவிட்டது கடவுள் நினைத்தால் மறுபடியும் அத்தையை இங்கு கொண்டு விடுவார்கள் கவலை படாதிங்க அம்மா....... பாவம் நம்மளைப்போல் அவங்களும் எங்கோ ஒரு மூலையில் இருந்து இப்படி நினைத்துக்கொண்டுதான் இருப்பார்கள் உங்களையும் அவர்கள் மறந்திருக்கமாட்டார்கள் என்று ஆறுதலாய் கயல் பேசியிருந்தாலும் அவளது உள்மனதில் ஏமாற்றமும் வருத்தமும் இருந்து கொண்டிருந்தது ஆனாலும் கயல் தாயிடம் எதையும் பெரிதாக காட்டிக்கொள்ளாமல் எப்பவும் போல சந்தோஷமாகவே பேசிக்கொண்டிருந்தாள்.
ஒருவொருக்கொருவர் மனதிலுள்ள வருத்தங்களை தங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டு வெளியில் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.அத்தை விஷயத்திற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்ற முடிவுடன் தன் தோழிகளை சந்திக்கலானாள் கயல்....!
நம் மகளுக்கு தெரிய வேண்டாம்னு நினைச்சோம் இப்போ சொல்லிவிட்டோம் ஆனால் இனி இதைப்பற்றி பேசவே கூடாது என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் சுசீலா காரணம் இனி ராஜலெட்சுமியை சேர்த்துக்கிட்டா நிச்சயம் நம் மாமா மாமி நம்மளிடம் பேசமாட்டார்கள் ஒதுக்கிவிடுவார்கள் எனவே அவர்கள் காலம் வரை அவளைப்பற்றி பேசவே வேண்டாம் என்ற முடிவை எடுத்தாள் சுசீலா....!
தன் தோழிகளை சந்தித்து ஆலோசிப்பதற்கு முன்னால் தன் தாத்தாப்பாட்டியை பார்த்து இதைப்பற்றி கேட்டுவிடவேண்டும் என நினைத்து தாத்தா வீட்டிற்கு சென்றாள் கயல் போகும் வழியில் ஒரு ரெட் பல்ஸர் பைக்ல அந்த வழியா போயிட்டிருந்தான் அந்த ராகேஷ்... இவன் எப்டி இங்க? என்ற யோசனையில் வீட்டிற்குள் நுழைந்தாள்.....
தாத்தாவை ஓடிசென்று கட்டிக்கொண்டாள், தாத்தாவும் பதிலுக்கு அன்பு முத்தத்தை அளித்தார், வழக்கம் போல் தாத்தா பாட்டியிடம் பேசிவிட்டு சாப்பாடும் எடுத்து கொடுத்தாள் மூன்று பேரும் சாப்பிட்டனர்....நான் ஒன்று கேட்கிறேன் உண்மைய சொல்லணும் என்று ராஜலெட்சுமி பற்றி கேட்டாள் கயல்................இவள் கேட்டதுதான் தாமதம் எங்கிருந்துதான் வந்ததோ கோவம் இப்டி ஒரு கோவத்தை தாத்தாவிடம் இதுவரை பார்த்ததே இல்லை...........அவளைப்பற்றி பேசாதே அவள் எங்களை மறந்து கண்டவன் கூட போனவா இனிமேல் என் உயிர் இருக்கிறவரைக்கும் அவள் இங்கு வரக்கூடாது மீறி வந்தால் அந்த இடத்துலேயே என் உயிரை விட்டுவிடுவேன் என்று கோவமாய் பேசினார் தாத்தா......ஆனால் பாட்டி எதுவும் பேசாமல் கண்களில் கண்ணீருடன் அமைதியாய் இருந்தார் அவர் மனதில் வலி கயலுக்கு புரியாமல் இல்லை.
அம்மாடி.....என் செல்லக்குட்டி தங்கமே அந்த ஓடுகாலியை பற்றிபேசி உன்னையும் என்கிட்ட இருந்து பிரிச்சிடாதடா ராசாத்தி உன்ன பார்க்காம பேசாம என்னால நிம்மதியா இருக்க முடியாது என்று கெஞ்சினார் தாத்தா...!
தாத்தாவின் வேதனையை நன்கு புரிந்துகொண்டாள் கயல்.
அன்னிக்கு அவள் வீட்டை விட்டு போனதால என்னோட மானமரியாதை எல்லாம் போச்சு....அவளோட சொத்துக்கு பதிலாக போகும் போது என்னோட மரியாதையையும் சேர்த்தே கொண்டு போயிட்டாள் துரோகி என்று மனவேதனை பொறுக்கமுடியாமல் அழுதுவிட்டார் தாத்தா.
தாத்தாவுக்கு ஆதரவாய் கயல் அவரது தோள்களை பற்றி "தாத்தா நடந்தது நடந்து போச்சு இனி அதைப்பற்றி நினைக்காதீங்க உங்களுக்கு நான் இருக்கேன்"என்றாள் அவளது அந்த கனிவான பேச்சு தாத்தாவின் மனதிற்கு இதமாய் இருந்தது ஆனால் பாட்டி மட்டும் எதுவும் பேசாமல் ஓரமாய் நின்றுகொண்டிருந்தார்.
ராஜலெட்சும் போனபிறகு உன் அம்மாவிடம் கூட நான் இதுவரைக்கும் பேசுறதில்ல உன் அம்மாவ பார்த்தா ராஜூ நினைவு வந்திரும் அதுமட்டுமல்ல உன் அம்மாவும் உடந்தையாக இருக்குமென்று எண்ணி அவளையும் திட்டி விட்டேன் அதை நினைத்து இன்றும் வருந்துகிறேன் என்று தன் மருமகளை அதாவது கயலின் தாயைப்பற்றி சொல்லி வருந்தினார்.
இதிலிருந்து கயல் ஒன்றை மட்டும் தெளிவாய் புரிந்து கொண்டாள்........
இவளது தாத்தாவுக்கு இரண்டு விஷயத்தில் மிகுந்த வேதனை.
1.ராஜலெட்சுமி அத்தை ஓடி போன விஷயம்
2.அம்மாவைத்திட்டியது/அம்மாவிடம் பேசமுடியாமல் தவிப்பது.
இதை சரியான கோணத்தில் செயல்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தாள் கயல்.
தன் தோழி அஜிதாவுக்கு கால்பண்ணி உடனே ஷீபா வீட்டிற்கு வா என்று அழைத்தாள்..தாத்தா பாட்டியிடம் சொல்லிவிட்டு ஷீபா வீட்டிற்கு புறப்பட்டாள் கயல்.......!
கயல்விழி ஒருநிமிடம் என யாரோ அழைக்கும் குரல் கேட்டு திரும்பினாள் கயல்....????
தொடரும்......!