கண்

ஆத்மாவின் பூக்கள் கண்கள்
மொழியின் ஆரம்ப முகவரி
விண்துளி மண் காக்கும்
விழிநீர் கண் காக்கும்

உள்ளம் குளிர நமதுடம்பில்
விளங்கும் அமுத கிரணம்
கருணை காட்ட ஆதியில்
அவசர ஆணை பிறப்பிக்கும்

வளிமண்டல தூசியின் காதல்
விழிமண்டலம் சிவக்கத் தெரியும்
கண்ணைக் காக்க கவசம்
கால வேகத்தின் கட்டாயம்

அண்ணலும் நோக்கி அவளும்
நோக்கினால் கண்வலி காலத்தில்
சென்னைக் கண்ணும் சேர்ந்தே
செம்புலப் பெயல்நீராய் கலக்கும்

மனஅழுத்தம் மண்டும் போது
விழிஅழுத்தம் விரைந்து வரும்
மழலை மனது கொண்டால்
உனக்கிலை நோய்கள் இனி!

கூலித்தொழிலாளி கண்களில் நீர்
சுருக்கிய வயிற்றைக் காட்டும்
கணினிப் பொறியாளனின் நீர்
கரன்சிக் கண்வலி காட்டும்

கிட்டப்பார்வை தூரப்பார்வை எப்படியாயினும்
மூக்குக்கண்ணாடி தான் முந்திநிற்கும்
“உயிர்ச்சத்து அ’ உணவில் சேர்த்தால்
முகத்தின் முதலவன் உயிர் கூட்டும்

எழுதியவர் : அருணன் (29-Nov-14, 6:54 pm)
சேர்த்தது : இரா . அருணன்
Tanglish : kan
பார்வை : 140

மேலே