உற்று ரசித்து உலவுதடி உணர்வு - இராஜ்குமார்
உற்று ரசித்து உலவுதடி உணர்வு
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
வாளியில் கொட்டும் நீரின்
சொட்டுகளில் மொட்டாக நீ மாற - உனை
முழுதும் முத்தமிட முயலுதடி முயற்சி .!!
சுவரில் ஒட்டிய வண்ணத்தின்
நிறங்களில் ரசனையாக நீ மாற - உனை
ஒட்டி உரச தவிக்குதடி தாகம் ..!!
ஒலிபெருக்கியில் அதிரும் இழையின்
காந்தமிகு காதுகளாய் நீ மாற - உனை
ராகம் பாடி இசைக்குதடி தாளம் ..!!
அறையில் நுழையும் ஒளியின்
வியத்தகு விரலாய் நீ மாற - உனை
விரட்டி பிடித்து ஓடுதடி ஓய்வு ..!!
தரையில் வீழ்த்த மலரின்
வாடாத இதழாய் நீ மாற - உனை
வாரி எடுத்து ரசிக்குதடி மனம் ..!!
கணினியில் ஒளிரும் திரையின்
கதிரியக்க கண்ணாக நீ மாற - உனை
காதல் செய்து தேடுதடி கவிதை ..!!
நுண்ணோக்கியில் தெரியும் உயிரின்
வெட்டுத்தோற்ற உருவமாய் நீ மாற - உனை
உற்று ரசித்து உலவுதடி உணர்வு ..!!
-- இராஜ்குமார்