என் தற்கொலை
நீளப் புரியாமை
நிறமாறிய வானவில்லில்
தொடுவானமாய் சிதறிய
பின்னோக்கிய சிந்தனைக்
கூடுகளின் கற்குவியல்
பயங்களாய்
கூடு விட்டு குருவியான
இலக்கியச் சந்தையில்
தீ சுட்ட ஒற்றை விரலை
மருதாணி சிவக்கடிக்க,
சிந்திய வெண்பனி
மழைத் தேசத் தாவலாய்
தன்னிலை மறக்க
தவம் ஒன்று கண்ட
தேக்கு மர தேவையை,
உச்சி மலைப் பாட்டை
காற்றொன்று தேடுவதாய்
தலை விரித்த கவிதையாய்
உடல் வளைத்த ஆடையில்
மிச்சமென ஒரு
நிர்வாணம்
இலை இணுங்கிய
சிறு துளிகளில்
ஓ வென கதறியது அருவி....
அது தீ சுட்ட புகை
என்ற மாற்றுக்
கருத்தில்
என் தற்கொலை....
கவிஜி