செய்ந்நன்றி யறிதல் 5 - எலியும், சிங்கமும் - இன்னிசை வெண்பா
சிற்றெலியும் சிங்கத்தைக் காப்பாற் றவலையைப்
பற்களால் வெட்டியதேன் கன்னியப்பா - பெற்ற
உதவி வரைத்தன்(று) உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. 11:5
குறிப்பு:
சிற்றெலி சிங்கத்தை வேடன் வலையிலிருந்து காப்பாற்றிய கதையை எல்லோரும் அறிந்திருப்போம். சிறிய எலிதானே என்றில்லாமல், வலிமையான சிங்கம் வலையிலிருந்து தப்பிக்க உதவியது பேருதவியாகும்.