பண்ணையார் மகள்

அழகின் ,
ஒட்டுமொத்த குத்தகைக்காரி ..
எறும்புகள் ,
தேடும் சர்க்கரைக்கட்டி ..
பூக்கள் மலரும் ,
இவள் முகம் பார்த்தே ..
மீன்கள் முத்தமிட தவறாது ,
இவள் குளிக்கையில் ..
குடங்கள் போரிடும் ,
இவள் இடுப்பினில் ஏறி வலம் வர ..
ஆக்சிஜனும் நைட்ரஜனும் சண்டையிடும் ,
இவள் உடைகளை உலர்த்த ..
தூரி ஏற்றாத ஆலும் ,
இவள் வாய் செல்லாத வேலும் ஊரினில் இல்லை ..
மாண்டாலும் மணம் குறையாது ,
இவள் கூந்தல் ஏறும் மல்லிகை ..
ஆலய மணியும் தோற்கும் ,
இவள் கொலுசு ஒலியில் ..
சிலைகள் குழம்பும் ,
இவள் கோவில் சென்றால் ..
மழைத்துளிகள் ஏங்கும் ,
இவள் தேகம் தொட ..
பட்டுப்புழுக்கள் தற்கொலை செய்யும் ,
இவளுக்கு சேலை நெய்ய ..
பல் விழுந்த கிழமும் வெறிக்கும் ,
இவள் வீதியில் வருகையில் ..
மீன்கள் தானே விரும்பி மாட்டும் ,
இவள் தூண்டிலிடுகையில் ..
திருவிழாவில் இளைஞர் கூடும் ,
இவள் அழகினை ரசிக்க ..
நிலவும் தரைக்கு வரும் ,
இவள் மெத்தைக்கு செல்கையில் ..
நெற்கதிரும் தலை குனியும் ,
இவள் மீது நாணம் கொண்டு ..
பனைமரமும் போதை கொள்ளும் ,
இவள் கடந்து செல்லும்போது ..
மாட்டு வண்டிக்கும் இறக்கை முளைக்கும் ,
இவள் பயணிக்கும்போது ..
"பண்ணையார் மகள் "..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

செம்பருத்தி பூ...
hanisfathima
08-Apr-2025

ஆன்மா விடைபெறுகிறது...
தாமோதரன்ஸ்ரீ
08-Apr-2025
