கருவறை -கயல்
மின்விளக்குகளோ
மின்மினி பூச்சிகளோ
சந்திரனோ
சூரியனோ இல்லாத
ஒளியற்ற ஓர் உலகம்
சத்தமின்றி
யுத்தமின்றி
இரத்தம் மட்டுமே
சூழ்ந்த ஓர் உலகம்
இரவு பகல் இரண்டுமே
ஒன்றான ஓர் உலகம்
கள்ளம் கபடம் இன்றி
கண்மூடி உறங்கும்
காரிருள் நிறைந்த
ஓர் உலகம்
பெண்மைக்கு மேன்மை சேர்க்கும்
புனிதமான உலகம்
உத்தமாமாய் உயிர்கள் வாழ்ந்த
கடைசி உன்னதமான உலகம்
பொன் பொருள் செல்வமென
பூமியிலே கிடைத்தாலும்
மீண்டும் போய் பார்க்க முடியா
தாயின் கருவறை என்னும்
புனிதமான உலகம் .