கண்ணீர்
அம்மா கையில் நான் சாய்ந்து அழும் பொழுது....
உனக்கு புரிந்தது...
உன் உள்ளம் சிவந்தது.....
இன்று தெரிந்தது......
என் மடியில் என் பிள்ளை எதற்கு அழுகிறது என்று புரிந்த பொழுது...
என் உள்ளம் அழுதது....
உன் மடியில் நான் அழும்பொழுது ..
என் மீது நீ வைத்திருந்த அன்பு புரிந்தது.....
பல ஆண்டு காத்து புரிந்து கொண்டேன் அம்மா உன் அன்பை....
அன்போடு உன்னை கையில் வைத்து தாலாட்டுகிறேன் நீ என் பிள்ளை ....
மரணத்தை வென்று மீண்டும் என் மடியில் பிறந்தாயே என் தாயே..
கண்ணீர் புரிந்ததம்மா.....
உன் அன்பை புரியவைத்ததம்மா ...
என் குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு உன் சிரிப்பை முகத்தில் காட்டியபொழுது .....