நெஞ்சு பொறுக்குதில்லையே
நான் சாஞ்சி கெடந்தேன் கதவோரம்
என் நெஞ்சு போகுது தெருவோரம்
பஞ்சப் பொழப்பால் மனம்
பஞ்சாய் பறக்குது
தஞ்சம் தந்திட யாவரின்
நெஞ்சம் மறுக்குது
கஞ்சிக்கு வழியின்றி
கெஞ்சி தவிக்குது வயிறு
செஞ்சி கோட்டையிலும்
கஞ்சத் தலைவனால்
காஞ்சி தலைவனுமே
மாஞ்சி போனாரே
ஆஞ்சி பிடிங்கிடும் அரசியல் ஊழலால்
வஞ்சம் தழைத்தோங்க
காஞ்சி கிடக்குது பூமி !