மூன்றாம் சாமம்-வித்யா

மூன்றாம் சாமம் -வித்யா

அவன் தேசத்தில்
வேரெல்லாம் பூக்கள்
நீட்டும்

மொட்டுக்களெல்லாம்
அவன் மூச்சுக்காற்றிலே
இதழ் விரிக்கும்

ரசனையின் அர்த்தம்மாற்றி
ஏகாந்த சுகந்தங்கள்
வகையறியவே
இவன் நாசி திறந்திருக்கும்

நிர்வாணத்திற்கு ஆடையணிவித்து
ஒரு கவியும்
மரணத்திற்கு மோட்சம் தேடி
ஒரு கவியும்
விஞ்ஞானத்திற்கு விரிவுதேடி
ஒரு கவியும்
துறவறம் காவிக்குள் புதைத்து
ஒரு கவியுமென........

மெய்யறிவு தேடிடுமிவன்
கவிகளின் பரிணாமங்கள்
குதிரைத்திறன் வேகத்தில்
ஓடிக்கொண்டிருக்க........

இப்பறவையின் வலையில்
வேடர்களாய் பூக்கள்
சாம்பல் பூசி உரமிட்டு
விதைக்கிறது பறவை

இவன் பிரவேசங்கள்
சில சமயம்

எல்லோரா
குகைகளில்
வண்ணம் தீட்டும்

சஹாரா
பாலைகளில்
ஒட்டகம் மேய்க்கும்

சிரபுஞ்சியில்
காளான்
வளர்க்கும்

நேற்றெழுதிய
மரபுக்கவியில்
புதுக்கவி ஆராயும்

இன்றெழுதும் ஹைக்கூ
நாளை வார்த்தைகளின்
நீட்சியில் பரிசீலிக்கப்படும்

கொக்கின் ஒற்றைக்கால்
தவம் கலையும்
மிஞ்சும் மீன்கள்
கருச்சிதையும்

முற்பகலும்
முன்னிரவும்
கூட........சில சமயம்
மூன்றாம் ஜாமம்

எழுதியவர் : வித்யா (6-Dec-14, 3:25 pm)
பார்வை : 214

மேலே