அவள் காதல் 0058

காதலிக்கும் போது
கால மெல்லாம் உன்னோடு
வாழும் வாழ்க்கையை
சிந்தித்து கொண்டிருந்தேன்
பிரிந்த போது நிந்தனை
நினைவுகளை
புரட்டிக் கொண்டிருக்கின்றேன்
ஆனால் உனக்கு
அந்த வலிகள் இருக்காது
ஏனெனில் நீ திட்டம் போட்டு
காதல் செய்தவள்
காதலிக்கு முன்னே
பிரியும் நாட்களை
குறித்து வைத்தவள் நீ