பலவீனமும் பலமாகலாம்
ஒய்யாரமாய் நடந்துவந்த கலைமான்
கொம்பின் அழகுகண்டு சின்னமுயல்
எண்ணியதாம் நமக்குத்தான் அசிங்கமான
காதுகள் இறைவன் கொடுத்துவிட்டான்
எனஎண்ணி வருந்தி கண்ணீர்விட்டதாம்.
கலைமானும் பெருமிதத்துடன் அதன்முன்னால்
கொம்பினை மேலும்கீழும் ஆட்டியதாம்
சட்டெனெவந்தசிறுத்தை இரண்டின்மேல் பாய்ந்ததாம்
காதினைமடக்கி புதருக்குள் ஓடியதாம் சின்னமுயல்
அதுகண்டகலைமானும் புதருக்குள் பாய்ந்ததாம்.
அந்தோ புதருக்குள்மாட்டியதோ அதன் கொம்பு
வந்தசிறுத்தைக்கு கிடைத்ததோ சுவையானமான்கறி
அப்போது உணர்ந்ததாம் சின்னமுயல்
பலம்என்று நினைப்பது பலமுமில்லை
பலவீனமென நினைப்பது பலவீனமுமில்லை
பலமும் பலவீனமாகலாம் சிலநேரம்
பலவீனமும் பலமாகலாம் பலநேரம்
இல்லாததை எண்ணி வருந்தாமல்
இருப்பதை வளர்ப்பதே வாழ்க்கையின்
தத்துவம் நான்அறிந்த உண்மை