ஆசை கொண்ட மனம்
எதை எதையோ நினைக்குது மனம்
ஏமாற்றம் அடைந்தால் துடிக்குது
சந்தோசம் மகிழ்ச்சி நிம்மதி எங்கே/
தேடுது தேடிக் கொண்டே இருக்குது மனம்
சந்தோசம் கிடைத்து விட்டால் தாளாது
அந்த மகிழ்ச்சி நிலைக்குமா என ஏங்குது
நிலை இல்லா வாழ்வில்
அற்பமான எண்ணங்களில் அளவற்ற ஆசை
நிலையில்லா உலகில் எண்ணற்ற ஆசைகள்
கட்டுப்பாடற்ற மனம் ஆலாய்ப் பறக்குது
முடியாத ஆசைகள்
மனிதன் மாழும் வரை ஓயாது
ஆசைப் பட்ட மனிதன் அன்று அடங்கவில்லை
இன்றும் ஆசைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம் எண்ணங்கள்
எண்ணங்கள் தான் ஆசைகள்
அளவோடு ஆசை கொண்டால்
திருப்தி நிம்மதி சந்தோசம்
உண்மையின் தேவைக்கு ஏற்ப ஆசை
அதுதான் நன்மைக்கு வழி காட்டும்
அழகான அன்பான அமைதியான வாழ்வை
அனுபவித்து நிறைவாக வாழக் கற்றுக் கொள்வோம்
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
அதிகம் ஆசைப் படாதே அதிகம் அவதிப் படாதே