naanam

வானத்தின் நாணம் அந்தியின் செந்தூரம்!
நிலமகளின் நாணம் நிலவும் இரவுதோறும் !
கண் சிமிட்டும் விண்மீன் வானில் தினந்தோறும்...
நாணத்தால் மறையும் நிலவும் மாதந்தோறும் !

கள்ளமற்ற காதலால் கரையை தழுவும் ,
அலையின் நாணம் கடலுள் நழுவும்
nathiyin நாணம் வளைவில் தெரியும்,
நாணம் மறைந்தால் கரை கடந்து விரியும்!

கன்னியின் நாணம் கன்னத்தில் சிவப்பு,
கண்ணுறும் காளையர் மனதில் களிப்பு!
நாணம் மனிதனின் சிறந்த பண்பாடு,
நாணம் நழுவ நமக்கும் பெரும்பாடு!

எழுதியவர் : meenatholkappian (8-Dec-14, 10:47 pm)
பார்வை : 75

மேலே