உன் காதல் போதுமே
காதலி
உன் ஓரப்பார்வை
என்னில் வீழுமா
காதலி
உன் வாசக்காற்று
என்னை தீண்டுமா
வேண்டுமே
உன் காதல் வேண்டுமே
ஏனென்றால்
நான் வாழ வேண்டுமே
உன்னோடு சேர்ந்து வாழ
காதல் கூட ஏங்க வேண்டுமே!...
உன் தீண்டலில்
என் தேகம் கரைய
என்னை இழக்கிறேன்
உன் புன்னகை
என் சோகம் விலக
என்னை மறக்கிறேன்
உன் முத்த மழையில்
நனைய வேண்டுமே
உன் மார்புக்குழியில்
புதைய வேண்டுமே
உன் மடி மீது நான் துயில
மரணம் வந்து தழுவ வேண்டுமே!..
உன் காதல் மட்டும் போதுமே...