அர்த்தம்
நான் பார்பதறிந்தும் மறைத்து சென்றாய்
வார்த்தை வெளிவருமுன்னே வெறித்து பார்த்தாய்
அருகில் வருமுன்னே அடிதுரம் விலகினாய்
ஆசை இல்லையோ என அரும்பியது என் மனதிற்கு
என் விதியென விலக முனைந்தேன்
காலம் கழிந்தபின்
என்னை காணாத காலத்தில்
உன் உடலின் உருக்கத்தை
கண்டபின்பே உணர்ந்தேன்
நீ விலகி சென்றது வெறுப்பால் அல்ல
வெட்கத்தால் என்று .......