விடுகதை
![](https://eluthu.com/images/loading.gif)
அண்டம் அகன்ற பட்டறை யொன்றில்
அல்லும் பகலும் வேலை – அதுவும்
அனாமத்தாய் அவனுக்கு மட்டும்
அவன் தனியே செய்த சமையலில்
பல கோடிகளுக்கான படையல்
அது அடுத்தவீட்டில் நடந்தாலும்
இங்கு நிறைந்திடும்
எதைப் போட்டுச் செய்வானோ
என்ன வூற்றிக் கலப்பானோ
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
எதுவும் ஆவதில்லை... கெட்டும் போவதில்லை...
அதன் சுவைக்கு நிகரும் இல்லை... நிலையும் இல்லை...
உண்ணும் பொழுதில் பொருந்திச் சுவைக்கும்
பிரிவில் துவர்க்கும்
பினைகையில் இனிக்கும்
சண்டையில் புளிக்கும்
சலிப்பில் உவர்க்கும்
தவற்றில் உரைக்கும்
தள்ளிப் போனால் கசந்து அலறும்
இது காதலில் மட்டும்.....
உண்மையின் வாசம் தெரியும்
கற்பனையின் மோகம் இருக்கும்
இல்லாத காட்சிகளை கண்ணுக்குள் படைக்கும்
அவன் சமையல்காரனோ.. மாய வித்தைக்காரனோ...
படையல் படைத்து மாலாது
எடுத்தும் குறையாது
கொடுத்தும் தாளாது
பறவ மறுக்காது
உலையிலும் சுடாது
வயிற்றிலும் செரிக்காது
வெளிக்கும் வராது
உள்ளுக்குள் இருந்தும் நாறாது
அசைபோட்டும் அரையாது
காலங்கள் கடந்தாலும் மாறவே மாறாது
உண்டவனெல்லாம் சமைக்கலாம்
சாமான் சட்டி தேவையில்லை
சமையல்ம் தெரிய அவசியமில்லை
இதில்
சமையல்காரனின் உருவகம் என்ன?
படைத்த பொருளின் உருவம் என்ன?