என் வலிகள் சில-சகி
![](https://eluthu.com/images/loading.gif)
@@என் வாழ்க்கை @@
இருள் நிறைந்த
என் வாழ்வில் வெளிச்சம்
என்றுமே இல்லை ....
என் உயிரான
அன்னையின் அன்பால்
உயிர்வாழ்கிறேன் ...
உண்ணும் உணவும்
விஷமாகவே தோன்றுகிறது
வலி கொண்ட என் வாழ்வில்...
உண்மையில்லா உறவுகள்
மத்தியில் இதயம்
துடிப்பதும் நின்றுவிட கெஞ்சுகிறது....
மரணத்தை மட்டுமே
நாடுகிறது என் மனம்....
உன் வரவை எண்ணி
உன்னுடன் பயணம் மேற்கொள்ள
ஓர் உறவு ஒன்று மண்ணில்....
முடிந்தால் இந்நிமிடமே
என் மரணமே என்னை
அழைத்துச்செல் ...