அமைதியின் புன்னகை

அமைதிக்கான நோபெல் பரிசு
பாகிஸ்தானின் மலாலா
என்ற இளம் பெண்ணுக்கும்
கைலாஷ் சத்யார்த்தி
என்ற இந்தியருக்கும்
இணைந்து..
கிடைத்த வேளையில்
ஏனோ..
மனம்..
ஏங்குகிறது..
என்றாவது ஒரு நாள்
பகை மறைந்து
மீண்டும்
இந்த நாடுகள் ஒன்றாய்
இணைந்திடாதோ..
என்று!
அமைதியின் புன்னகையை
நம்
அடுத்த தலைமுறையாவது
அனுபவிக்க வேண்டுமென்று
ஆசையும் வருகுது இன்று !

எழுதியவர் : கருணா (12-Dec-14, 9:38 am)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : amaithiyin punnakai
பார்வை : 669

மேலே