இயற்கையை நேசி
மழையில் நனைந்து
பனியில் உறைந்து
தென்றலில் திளைத்து
நிச வாழ்வினை
நீர்க்காமல் செல்
அதீத தேவையோ
மழையின் குடையும்
வெயிலின் நிழலும்
நிறுத்து இயற்கையினும்
செயற்கையை இன்றேல்
கரியாகிபோகும் காணும்
காட்சிகள் சுமையாகிபோகும்
மூச்சுக்காற்றும்
இயற்கையை நேசி
இன்றேல் மனிதம்
மறந்து மூர்க்கம்
பெருகி முயற்சிகள்
முட்த்தடைகளாகும்