ஒரு சந்தர்பம்

என்னை பத்து திங்கள் சுமந்து
பத்தியம் இருந்து I ஈன்றால்
அவள் உயிரை உரிக்கி பாலாக்கி
உணவாக ஊட்டி வளர்தால்

காடுமேடு எல்லாம் திரிந்தால்
கால்வயிறு கஞ்சி குடித்தே வாழ்ந்தால்
என் கண்ணீர் கண்ணம் தழுவாமலும் - கால்நகத்தை
புவியன்னை கொஞ்சாமல் பொத்தி பொத்தி வளர்தால்

பரிதியே பார்த்து பதறியிருப்பான்
மதியே மயங்கி மண்ணில் விழுந்திருபான்
எரும்பும் என்னி வியந்திருக்கும் - என்தாய்
அவளின் உழப்பை கண்டு

கந்தை துணியை பட்டாக நினைத்தே
அணிந்து வாழ்தால் வாழ்நாள் முழுவதும்
எனக்கோ பாவிமகள் பேன்ட் சட்டையை - அணிவித்து
மகராசனாக பார்த்தே மகிழ்ந்தால்

அவள் கண்ணயர்து பார்ததில்லை
மதி காவல் நேரத்தில்
அவள் கால்லயர்து பார்ததில்லை
புவிதாயின் பூ விழியில்

இன்றோ பார்மகள் பாடையில்
படுத்து பரந்து போனால்
பத்து மாதம் சுமந்த பாவியை
பாக்காமலே மறைந்து போனால்

மானகெட்ட மனிதனாக படைதவளை
மறந்து போனேன் மதிமயக்கில்
வாருங்கல் ஊர்திரண்டு கல்லோடு
காவல் கம்போடு

துப்புங்கல் எச்சிலை என்முகத்தின் மேலே
குத்துங்கல் கல்லால்
மறந்து போன என் இதயதின் மேலே
அடியுங்கல் மதிகெட்ட தலைமீது

என் பிணத்தை நடு தெருவில்
போடுங்கள் நாய்கூட காரிதுப்பட்டும்
பாயா போன மானிட உலகில் - மனிதன்
இந்த பாவி பிணத்தை பார்தாவது திருந்துட்டும்.

எழுதியவர் : udayakumar (14-Dec-14, 7:10 pm)
சேர்த்தது : உதயகுமார்
பார்வை : 132

மேலே