நட்பு

ஏய் ஏய் பார்யென்று
உன்சடையை திருப்பி
கொதை சம்மாயிருக்கயென கேட்ட நீ..
ஐந்து தோழகர்கள் மத்தியில் இருந்தபடி
என் அறுப்பு மீசையை
தடவி வயசுக்கு வரபோரான் என்று
கேலி செய்த நீ
ஆழமானஆற்றில் நீந்த உன் பாவாடையில் அடைத்த
காற்று மிதவையில்
வாடா வாடாயென்று
என்னை அழைத்து
சேர்த்துக்கொண்ட நீ
யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில்
ஓடை மாமரத்தில் ஏறி மாங்க்காய் பரித்துக்கொண்டு
ஏலே ஏலே
யாரவது வரங்களா பார் யென்று
காவலாக நம்பிய நீ.
பாத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வர
என்னோடு குரைவன மார்க்கா யென்று
எனக்காக கவளை பட்டு
வருத்தப்பாட்ட நீ
எம்ளாய்மண்டு அலுவலகலம்
மட்டுமல்லாமல் எங்கு போனாலும்
உன் விட்டில் உள்ளவர்களிடம்
இவன் துனையிருக்க
என்னபயம்யென்று
என்னை அனைக்கும் நீ
அத்தை மகன் முரையென்றாலும்
தப்பாய் நினைததில்லை
ஆனாலும் கல்லாணம்மாகி ஒரு சில ஆண்டுக்குப்பின்
உன் கணவனோடு வீடு வந்து
திண்ணையில் அமர்திருக்க
நான் வந்ததைப் பார்த்து எழுந்தாய்
எப்படிடா இருக்கயென்று கேட்பாய் யென்று நினைத்தேன்

நல்லாயிருக்கிங்களா என்று
நாகரிக வார்த்தையால் கேட்டாய்
மக்கிவிட்டது நம் நட்பேன்று
மனசு வலிக்குதடி......

எழுதியவர் : தே.ராகுல்ராஜன் (15-Dec-14, 9:13 pm)
சேர்த்தது : தேஇராகுல்ராஜன்
Tanglish : natpu
பார்வை : 182

மேலே