இன்பக் கடலில் இதயம்

மணநாளாம் கங்கள நாளாம்
மங்கை எனக்கு திரு நாளாம்
வீதி எங்கும் மாவிலை தோரணம்
வீட்டுக்குள்ளே கும்மாளம்......

என்னைச் சுத்தி வர பூவையர் கூட்டம்
நடுவினிலே நாணத்துடன் நான அமர
கேலி செய்த வண்ணம் மருதாணி
இடப்போறாள் மல்லிகா.......

செக்கச்செவந்த மருதாணியைக்
கண்டு அத்தான் மேல் உள்ள ஆசை
என்று கொக்கரிக்கப் போறாள்
கோகிலம்..........

கும்மி அடிப்பார்கள் அம்மி மிதிக்கப்
போவதைச் சொல்லி எட்டுக்கட்டி
பாடலாக.........

வெட்கம் கொண்ட நான் இரு கரம்
கொண்டு மறைக்கப்போகின்றேன்
மங்கை என் மதி முகத்தை.......

பௌர்னமி போல் என் முகம் மலர
பெற்ரோர் உள்ளம் மகிழ வந்தோர்
எல்லம் வாழ்த்துச் சொல்ல எத்தனை
இன்பம் என் உள்ளே.........

மேள வாக்கியங்களோடு மக்கள்
கூட்டத்தின் நடுவே ராஜா போல்
அவர் வர ஜன்னல் வழியே நான்
எட்டிப் பார்க்க அதை யார் நோட்டம்
போட்டு என்னை வம்பு இழுக்கப்
போகின்றார்களோ.....

ஊரார் மத்தியில் உறவின் முன்
நிலையில் அவர் பக்கமாக நான்
அமரவேண்டுமே இப்போதே
பட படப்பாக உள்ளதப்பா.....

என் இடை மேல் அவர் கரம்
போடையிலே தடை போடுவேனோ
இல்லை காற்றில் ஆடும் தென்னங்
கீற்றுப் போல் வளைந்து கொடுப்பேனோ
சொல்லடி என்னுள்ளே அமந்துள்ள
பெண்மையே.........

அய்யய்யோ அன்நாள் வரப்போகும்
திரு நாளை நினைக்கையிலே
இன்நாளிலே எனக்குள் மத்தாப்பூ
ஜொளிக்கின்றதே.......

மண நாளாம் மணநாளாம் மங்கை
எனக்குத் திருநாளாம் பெற்ரோருக்கு
நிம்மதி நாளாம் மற்ரோருக்கு சந்தோச
நாளாம் இந்த ஒரு நாளைக் காத்திருந்தேன்
நான் வெகுநாளாய்..........

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (16-Dec-14, 12:00 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 81

மேலே