இரவும் சிரிக்கட்டுமே
இரவின் வரவேற்பு ஆதவன் மறைந்ததும்
நிலவை அழைத்தே மகிழ்கிறதே
புவியில் ஆனந்தம்
சோறு சமைக்கிறது வானம்
நட்சத்திரக் குறிப்பெழுதி மகிழ்கிறதே
வானில் ஆனந்தம்
உண்ட மயக்கம் நிலவொளிக்கு
உறக்கம் தேடி ஒவ்வொரு சன்னல்களிலும் ஆவலில்
தேடலில் ஆனந்தம்
சன்னல்கள் கிடந்தது மூழ்கியே
நடு ராவின் பயத்தால் நடுங்குகிறதே
தூக்கத்தில் ஆனந்தம்
கூர்க்காவின் ஊதல் சத்தம்
கேட்டதில் தாமதம் நினைவுகள் கலைகிறதே
நினைவுகள் ஆனந்தம்
குலைத்து ஓய்ந்தன நாய்கள்
நடு நிசி ஓய்ந்ததில் விடிந்து விட்டதென
ஏக்கம் ஆனந்தம்
விழித்தன விழிகள் விடியும் வரை
இமைகள் மட்டும் மூடாமல் நிசமானதில்
கனவுகள் ஆனந்தம்
இரவுகளில் நீண்டதொரு பயணம்
பகலில் மட்டும் தொடராமலே களைத்ததில்
எண்ணங்கள் ஆனந்தம்
சிரித்தன இரவும்
நினைத்தன கனவும்
நாம் நிசமாக வேண்டுமென்று ....