தந்தைக்கு கடிதம்
வீட்டில்.....
அம்மா நா ஸ்கூல் கு போறேன் சாப்பாடு போடும்மா என்றாள் செல்லமணி
இதோ வரேண்டா கண்ணு ..என் செல்லம்ல ச்கூல்கு போயிட்டு வரேன்மா
பள்ளியில்....
பசங்களா..சத்தம் போடாதீங்க...எல்லாரும் அமைதியா இருங்க அடுத்த வாரம் பெற்றோர் கூட்டம் இருக்கு எல்லாரும் உங்க அப்பா அம்மாவ அழைச்சிட்டு வாங்க சரியா ....
சரிங்க டீச்சர் ..மாணவர்கள்
ஒருவாரம் கழித்ததும்
வீட்டில்...
அம்மா இன்னைக்கு ஸ்கூல் ல்ல பெற்றோர்களுக்கான மீட்டிங் வைக்கிறாங்க ....அப்போ எல்லா மாணவர்களும் அப்பா அம்மா வ கூட்டிட்டு வரணும் நு சொல்றாங்க ..இப்பவாது அப்பா வருவாராம்மா ...?
இடியாக இடித்தது மகளின் கேள்வி ..கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.. மடை திறந்த வெள்ளம் போல....
ஏம்மா அழறே...அப்பாதான் வெளிநாட்டுல இருக்கார்னு நீதன சொன்ன அடுத்தவாரம் வருவார்னு சொன்ன அதான் அப்பா வருவாரில்ல ..ஏன் அழரம்மா ...
இல்லடா .....ரொம்ப நாள் கழிச்சு வராரில்லா அதான் சரி நீ சாப்டு நீ ஸ்கூல் கு போ ...
வரேம்மா ...
பள்ளியில் ...
ஆசிரியர் ....சரி எல்லாரும் அமைதியா பெஞ்ச்ல உக்கார்ங்க.... உங்களுக்கு போட்டி வைக்கப் போறேன் ...உங்களோட மனசுல என்னல்லாம் ஆசைகள் கனவுகள் இருக்குன்னு ஒரு போட்டி... சரியா...?
இந்தாங்க ஒவ்வொருத்தரும் பேப்பர் வாங்கிக்கங்க ...சீக்கிரமா ஒரு பக்கத்ல கடிதமோ, கட்டுரையோ, ,கதையோ ,கவிதையோ ஏதாவது உங்க மனசுல இருக்குறத எழுதுங்க ...சரியா....?
சரிங்க டீச்சர்...
அரைமணி நேரம் கழிந்தது அனைவரும் எழுதி முடித்தனர்..
எங்க எல்லாரும் ஒவ்வொருத்தரா வாசிங்க என்றார் டீச்சர்.
கண்மணி தன் பெற்றோருக்கு நல்லா படிச்சு டாக்டரா அவங்கள தன் கூட வைத்து காப்பதுவேன்னு சொன்னாள்
பொன்மணி தன் அம்மா கூலி வேலை பார்த்து படிக்க வைத்து கஷ்டப் படறதை நினைத்து நான் ஆசிரியராகப் பணிபுரிந்து அம்மாவக் காப்பத்துவேன் என்றாள்
செல்லமணி மட்டும் தயங்கினாள் படிப்பதற்கு ...அவளை படிக்கச் சொன்னார் ஆசிரியர். அவள் பதிலுக்கு கண்களில் கண்ணீர் விட்டாள்
ஆசிரியரே அதை வாங்கிப் படித்தார்...
அப்பாவுக்கு கடிதம் எழுதியிருந்தாள்
அன்புள்ள அப்பா வுக்கு ....நலமா ? அப்பா ...நான் நலம் ..நீங்க எப்போ வருவீங்கப்பா...? உங்களைப் பாக்கணும் ... ...உங்கள பார்த்து ரொம்ப நாள் ஆச்சுப்பா ..அம்மா.. நீ வெளிநாட்டிற்கு போனதாய் சொன்னாள் ...எனக்கு புரிந்துவிட்டது ..நீ எங்கு இருக்கிறாய் என்று ...பாட்டியிடம் கேட்டுத் தெரிஞ்சிகிட்டேன் ...
போதும்பா... எங்களைப் பிரிஞ்சது ...வாரம் வாரம் ஒரு முறையாவது வந்து எனக்கு குளிப்பாட்டி, சோறு ஊட்டி என்ன ஸ்கூல் ல்ல கொண்டுபோய் விடுங்கப்பா ...முன்ன மாதிரி கண்ணே..!மணியே !ன்னு முத்தம் கொடுத்து கொஞ்சுவீங்கலேப்பா ...பாலும் சோறும் ஊட்டி எனக்கு நிலா காட்டி நிறைய பாடுவீங்க... நிறைய கதை சொல்லுவீங்களேப்பா ...இப்போ நீங்க ஏன் அமைதியா இருக்கிறீங்க என்னைக் கூட எதிர்ல கண்டாலும் கண்டுக்காமப் போறீங்கப்பா ....பக்கத்ல அந்த புது அம்மா உங்கள திட்டுவாங்கலாப்பா....?
அம்மா தினம் வீட்டு வேலை செஞ்சு கஷ்டப் படுறாங்கப்பா ...நீங்க ஏன்பா அம்மாவ விட்டுட்டு அந்தம்மாவக் கூட்டிட்டுப் போனீங்க ...? அம்மா அழகாத்தானே இருக்காங்க...நல்லா பேசுறாங்க ..நல்லா சமைக்கிறாங்க நல்லா பாடுறாங்க ...அவங்கள் ஏன்பா விட்டுப் போன ? அந்தம்மா மட்டும் ?....எனக்குத் தெரியும்பா ...அவங்க உங்கள திட்டுறதும் சோறு போடாம உங்கள துரதுறதும் பாட்டி சொன்னாங்க ...வந்துருங்கப்பா எங்களோட அம்மா உங்கள எவ்வளவு அழகா பாத்துப்பாங்க ....அம்மா ஒரு வார்த்தை கூட புது அம்மாவைத் திட்ட மாட்டங்க...நீங்க வாரம் ஒருதடவையாது வந்தாப் போதும்னு அழராங்கப்பா ...எனக்கு ஸ்கூல் ல பெற்றோர் கூட்டம் இருக்கு அப்பவாது வாங்கப்பா ....நான் காத்திருக்கிறேன் அப்பா
இப்படிக்கு உங்கள் மகள் செல்லமணி
ஆசிரியரின் கண்களில் கண்ணீர்.... கடிதத்தைப் படித்ததும் அவளை வாரி அணைத்துக் கொண்டாள் அந்த'' புது அம்மா ''ஆசிரியரின் மனம் மாறியது