நீலக்குயில் தேசம்15---ப்ரியா
அரவிந்த் ராஜலெட்சுமியிடம் விடைபெற்று கிளம்பும் சமயம் அவர்கள் குடும்பத்திலுள்ள மற்றவர்களை பற்றி விசாரித்தான் அப்பொழுது ப்ரியதர்ஷினி "அப்பா எங்கள பிரிந்து வேறநாட்டுல வேலைப்பார்க்கிறாங்க 6மாதங்களுக்கு ஒருமுறை தவறாமல் வந்து செல்லுவார் அண்ணன் பிரண்டோட அக்கா திருமணத்திற்கு போயிருக்கான்" என்று சொன்னாள்........இப்போதுதான் இவன் மன நிம்மதி அடைந்தான்.அங்கிருந்து சந்தோஷமாய் கிளம்பி ஊருக்கு பயணமானான் அரவிந்த்..........!
ஊருக்கு வந்ததும் திவ்யாவை ஒருமுறை அவளது வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு கயலைப்பார்த்து பேசுவதற்காக கயலின் வீட்டிற்கு வந்தான்.....ஆனால் கயலோ மிகுந்த சோகத்தில் இருந்தாள்...?
என்னக்கயல் என்ன ஆச்சி ஏன் சோகமா இருக்கா? என்று அரவிந்த் கேட்டதும் ஒண்ணுமில்லை நீ போன விஷயம் என்ன ஆச்சிடா சீக்கிரம் சொல் என்று ஆர்வமாய் கேட்டாள்.......வேறு ஏதோ கவலை ஒருபுறம் இருந்திருந்தாலும் இன்னொருபுறம் அத்தை விஷயத்தில் ஆர்வமாய் தான் இருந்தாள் கயல்........
அத்தையிடம் பேசியதையும் ப்ரியதர்ஷினி இவளைப்போல் உருவத்திலும் குணத்திலும் இருப்பதையும் சொன்னான் அரவிந்த்.
என்னால நம்பவே முடிலடா......எப்டி நாங்க ரெண்டுபேரும் ஒரே மாதிரி...? அதிர்ச்சியாகவும் இருக்குது சந்தோஷமாகவும் இருக்குது...
அவங்கள பார்க்கணும்டா அதற்கு முன்னால தாத்தாவை எப்டியாவது மனசு மாற வைக்கணும் என்று உறுதியாய் சொன்னாள் கயல்... அதுமட்டும் நடக்கவே நடக்காது கயல் என்று சொன்ன தன் தாயின் குரலைக்கேட்டு திடுக்கிட்டாள் கயல்.....ஏம்மா இப்டி சொல்றீங்க உங்களுக்கும் அத்தைனா உயிர் இருந்தும்??????என்று கயல் வருத்தப்பட்டாள்.
எனக்கு உன்னை எவ்வளவு புடிக்குமோ அவ்வளவுக்கு ராஜலெட்சுமியையும் புடிக்கும்டி ஆனா.........என்று இழுத்தாள் சுசீலா!
ஆனா என்ன அம்மா என்று ஆத்திரமடைந்தாள் கயல்......இப்போ இருக்கிற நிலைமைக்கு உன் தாத்தாதான் எனக்கு முக்கியம் அவர் மனசுக்கு விரோதமா எதுவும் பண்ணக்கூடாது என்று கண்டிப்பாய் சொல்லிவிட்டாள் சுசீலா.
உன் அத்தைப்பொண்ணும் நீயும் ஒரே உருவத்தில் இருப்பது எனக்கு இன்னும் சந்தோஷம்தான்மா.
உன் அப்பாவும் தங்கையான ராஜலெட்சுமியும் இரட்டையர்கள் போன்றுதான் இருப்பார்கள் நீ உன் அப்பாவை மாதிரியும் ப்ரியதர்ஷினி அவள் அம்மாவை மாதிரியும் இருப்பதால்தான் இந்த உருவ ஒற்றுமை என்று விளக்கினாள் கயலின் அம்மா...
அதெல்லாம் இருக்கட்டும் அம்மா நம்ம 3பேரும் சேர்ந்து எப்படியாவது தாத்தா மனதை மாற்றுவோம் சரியா என சொல்லிவிட்டு அங்கிருந்து கலைந்தனர்.
கயல் தனது தாத்தாவின் பக்கத்தில் போய் வழக்கம் போல் அன்பாக பேசி சிறு சிறு சேட்டை செய்து கொண்டிருந்தாள் அவளது தலையை தடவிக்கொண்டே........"கயல் குட்டிமா நாளைக்கு நாமெல்லாம் சேர்ந்து கொல்லிமலைக்கு போகப்போறோம் ரெடியா இரு"என்றார்.
கொல்லிமலைக்கா?எதுக்கு தாத்தா அங்க யாரிருக்காங்க என்று புரியாமல் கேட்டாள்....?
அங்கு சென்ற பிறகு சொல்கிறேன் என்று நாசுக்காய் பதிலளித்தார் தாத்தா.
ம்.........சரி தாத்தா நாளைக்கே தெரிஞ்சிக்கிறேன் என்று குழப்பமாய் சென்றாள் கயல்.
தாத்தா நான் ஷீபா வீட்டுக்கு போயிட்டு வருகிறேன் அம்மாகிட்ட சொல்லிடுங்க என்று சொல்லிவிட்டு தாத்தாவின் பதிலையும் எதிர்பார்க்காமல் அங்கிருந்து கிளம்பினாள் கயல்............
ஷீபாவின் வீட்டில் தோழிகள் 3பேரும் அமர்ந்து ஆழ்ந்து பேசிக்கொண்டிருந்தனர்......அந்த ஆசிரியர் காதல் சொன்னதையும் ராகேஷிடம் இவள் காதலை சொல்லிவிட்டதையும் பற்றி பேசினர், தோழிகள் ராகேஷ் விஷயத்தை பற்றி சந்தோஷப்பட்டிருந்தாலும் இந்த ஆசிரியரின் ஒருதலைக்காதலை நினைத்து வருத்தப்படனர்.
கயலுக்கோ அது ஒரு விஷயமாக இல்லை ஏனென்றால் அவள் ராகேஷுடன் காதல் களத்தில் இறங்கிவிட்டதே அதற்கு காரணம் எதற்கும் நம்முடன் ராகேஷ் இருக்கிறான் என்று முழுமையாக நம்பினாள் கயல்.........?
கயலும் ராகேஷும் நேரில் பேசுவதை விடவும் செல்போனில் அதிகமாக பேசி வந்தனர் இந்த விஷயம் அரவிந்துக்கு தெரிந்தும் கண்டுகொள்ளவில்லை,இன்னொருபுறம் கயல் தன் அத்தை ராஜலெட்சுமி மற்றும் ப்ரியாவிடம் பேசிக்கொண்டாள்...........
ராகேஷை காதலித்ததும் அத்தை குடும்பத்தை கண்டுபிடித்ததுக்கும் அரவிந்த் தான் காரணம் நிறைய உதவிகள் செய்துள்ளான் என மனதில் நினைத்து பெருமிதப்பட்டுக்கொண்டாள் கயல்.
நாளைக்கு விடுமுறை காலையிலேயே கொல்லிமலைக்கு போகணும்.........ராகேஷிடம் பேசணும் எப்படி?என்ற எண்ணத்தில் படுத்தவள்தூங்கிவிட்டாள்.........சிறிது நேரத்தில் ஐயோ...என கத்திக்கொண்டே எந்திரித்தாள் கயல் திடுக்கிட்டவள் சுற்றுமுற்றும் பார்த்தாள் எல்லாம் கனவா....? என்றவளுக்கு மனதில் எண்ணற்ற குழப்பங்கள்......ஏன் இப்படி ஒரு கனவு.......
அதாவது மறுபடியும் இவளது நீலக்குயில்தேஷம் கனவில் வந்தது அதே சூழல்தான் ஆனால் எல்லாம் வழக்கம் போல் நடக்க இன்று கனவில் வந்தது அந்த காதல் உரைத்த ஆசிரியர்?????எப்படி இது சாத்தியமாகும் என நினைத்து எழும்பி வெளியே வந்தாள்........
கடந்த 4வருடங்களாக தொடர்ந்து அடிக்கடி இந்த கனவுதேஷம் வருவது வழக்கமே அந்த காதலனின் முகத்தை இதுவரைக்கயல் காணவில்லை........ஆனால் இரண்டு மூன்று நாட்களுக்கு முன் அந்த கனவுக்காதலனாக ராகேஷ் தெரிந்தான்.......ஆனால் மறுபடியும் இப்பொழுது அந்த ஆசிரியர் முகம்......?என்ன செய்வது ஏன்தான் இப்படி என்று குழப்பத்தோடு குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து கொண்டிருந்தாள் கயல்..........
தன் பேத்திக்கு எந்த பிரச்சனையுமே வரக்கூடாது என்றும் நாளைக்கு சாமியார் என்ன சொல்லப்போகிறாரோ என்ற எண்ணத்திலும் பயந்துகொண்டே அங்குமிங்குமாய் நடந்து கொண்டிருந்தார் இன்னொருபுறம் கயலின் தாத்தா........
தன்னை இவ்வளவு வெறுப்பேற்றி காதலுக்கு என்னன்னவோ விளக்கமளித்து நிராகரித்த அந்த கயல்விழியை எப்படியாவது பழிவாங்க வேண்டுமென தன் நண்பர்களுடன் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தான்........??