குழந்தையின் வேண்டுகோள்

ஜாதி, மதம் இல்லை
நாங்கள் விளையாட!

உயைர்வு, தாழ்வு இல்லை
நாங்கள் கைகூட!

பொய் இல்லா சிரிப்பு
எங்களுக்கு!

ஆண், பெண் பிரிவில்லை
எங்களுக்குள்!

கேட்டது கிடைக்கும்
கவலை இல்லா சந்தோசம்!

பயமுமில்லை, துக்கமுமில்லை
எங்கள் மனதிற்க்கு!

பசி வந்தால் படையல்
போட தாய் இருக்காள்!

அழுகை இல்லா தூங்க
அவள் தாலாட்டு இருக்கு!

இனி என்ன வேண்டும் எங்களுக்கு -
இப்படியே குழந்தையாகவே வாழ்ந்து
விடுகிறோம் விட்டு விடுங்கள் எங்களை!!!

எழுதியவர் : வே.அழகேசன் (20-Dec-14, 12:04 pm)
பார்வை : 74

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே