பள்ளிக்காலம்

பள்ளிக்காலம்

அன்பு மொழி பேசி மகிழ்ந்த நேரம்
ஆழக்கடல் நீராடிய மேகம்
அழகான சுரம் பாடி,அழியாத உறவாகி
பயின்ற அந்த பள்ளிக் கூடம்
முன் வரிசை,பின் வரிசை எட்டிப்பார்க்கும்
பள்ளி மான்கள் நாங்கள்

பெட்டைகளும்,பெடியங்களும் கலந்த
கபடமற்ற கோவில்.......
அந்த தூண்களும் சொல்லுமே......
அங்கே அவர்களின் நினைவளைகலினை
சில தூண்களில் கரிகளினால் கிறுக்கியதே
அந்த போக்கிசத்தினை இப்போதும் பார்க்க ஆசை
என்ன சேய்வது அந்த காவிய நாட்கள்
இனியும் வந்திடுமோ.............

எழுதியவர் : "கவியின்பன்" உதயகுமார் சஜீ (21-Dec-14, 7:54 pm)
Tanglish : pallikkalam
பார்வை : 336

மேலே