அவள் காணமல் போய்விட்டால்

என்னுள் இருந்த
அனைத்தும்
காணாமல் போயிருந்தது
நானும் எதையும்
தேடவில்லை ,

முதுகு தண்டில்
எதோ ஒன்று
முளைத்து கொண்டிருந்தது

சப்தங்கள் எதுவும்
என் காதருகில்
வரவில்லை,

மலைகள்
எனக்கு வழிவிடுகின்றன,
எறும்புகள் என் அருகில்
அமர்ந்து பேசிகொண்டிருந்தது ,

அவள் விரல்கள்
என் தலை முடிக்குள்
விளையாடுகின்றன ,

என் கண்கள்
பார்துகொண்டிருபதை
இமைக்காமல்
பார்கிறேன் ,

ஒரு வேலை
என் தூக்கம் களைந்துவிட்டால்
நான் படைத்ததை
எங்கு சென்று
காண்பேன் ...

எழுதியவர் : ரிச்சர்ட் (22-Dec-14, 3:48 pm)
பார்வை : 338

மேலே