தமிழ் மொழி
மழை துளி என் வாசல் வந்தது ,
விடுகதை ஒன்றை விட்டுச் சென்றது .
தென்றல் என்னை தழுவ வந்தது,
தொடர்நிலைச் செய்யுள் ஒன்றை படித்துச் சென்றது
இடி என்னை பயமுறுத்த வந்தது ,
இலக்கியம் ஒன்றை வடிவமைத்து சென்றது .
மின்னல் என்னை மயக்க வந்தது ,
பழமொழி பல சொல்லி மறைந்தது .
தமிழ் மொழி என்பது ஒரு சாராரின் மொழி அல்ல இயற்கையின் மொழி ! இதயத்தின் மொழி ! இயக்கும் மொழி ! அதுவே , எங்கள் செம்மொழியாம் ! தமிழ் மொழி