என் அன்புத் தோழியே !!!
அன்புக்கு ஆதரணம் நீ
ஆசையுடன் பேசும் தோழி நீ
வாழ்க்கையின் பேராதரவு நீ
வாசல் தோறும் வீசும் பூங்காற்று நீ
துறத்தும் தென்றல் காற்று நீ
தோரணை போட்டு கொண்டாடும் விழா நீ
படிக்கும் நல்ல புத்தகம் நீ பாசத்தை பொழியும் தேவதை நீ
இதயம் வரையும் கவிதை நீ இறக்கம் காட்டும் மனிதநேயம் நீ
கண்கள் விழிக்கும் காலை நீ கண்ணங்கள் சிவக்கும் சிரிப்பு நீ
காலங்கள் பேசும் பழமொழி நீ
கவலை இல்லாத புதுமொழி நீ
சந்தம் பாடும் சரித்திரம் நீ சாரீகம் பாடும் பூங்குயில் நீ
உறுதியான முடிவு நீ இறுதியான ஆரம்பம் நீ
நீ இல்லாமல் நான் இல்லையே
என் அன்புத் தோழியே !!!