ஒட்டுண்ணி

ஒட்டுண்ணித் தாவரங்கள்
++++++++++++++++++++++++
( கட்சி மாறும் சிறு ப (க) ட்சிகள்)
காய்க்கும் அதிகம் என்று
தோட்டக்காரன் கிளை பல ஒட்டி
வளர்த்தான் பயன் பல
பல காலம் பெற்றான்
ஓங்கியே வளர்ந்தது
ஒன்றாய்க் கிளை பல சேர்த்து
அருவடைக் காலம்
அண்மித்த வேளை
புயலாய் காற்றும் மாறி
பூவும் பிஞ்சும் முதலில் உதிர
தோட்டக்காரன் கலங்கியே
மரத்தை நோக்க
காக்காய் எச்சம் தலையில் போட
அதிஸ்டம் அது என நினைத்தான்
மீண்டும் பூக்கும் என
தோட்டக்காரன் நினைக்க
ஒட்டிய கிளை அது
வேறாய் பிரிந்து
தனித்தே காய்க்க முடியாமல்
வேறு மரத்தில்
ஒட்ட நினைத்து
ஒட்டுண்ணித் தாவரமாயின
அதிஸ்டம் இதுவென
புது மரம் நினைக்க
குதூகலமாயின ஒட்டிய
கிளைகள்!
கேள்விக் குறியாய்
காத்தே இருந்தன
விரைவில் பூப்பேன் காய்ப்பேன்
என்றே மனதில்
கனவாய் இருந்தன
ஒட்டிய தாவரம்
பெறுமா பலனை
இல்லை தாய் மரம்தான்
பெறுமா இதனால் வரத்தை
காலம் சொல்லும்
கால நிலையும் சரியானால்
பூத்துக் குழுங்கும் அழகாக
காலம் பொய்த்தால்
என் செய்யும் இக் கிளையும்
பொருத்தே இருப்போம்
சில காலம்!