நீலக்குயில் தேசம்17---ப்ரியா

சாமியார் சொல்வதை கயல் இன்னும் ஆர்வமாய் கேட்டுக்கொண்டிருந்தாள்........... அவர் சில வழிமுறைகளை அவளுக்கு சொல்லிக்கொடுத்தார்.......அதாவது கயல் அந்த கனவில் வரும் பையனை இப்போதே பார்த்தும் இருக்கலாம் பார்க்காமலும் இருக்கலாம் பார்த்திருந்தாலும் அவன்தான் உன் கனவு காதலன் என்று உன்னால் இப்போது உறுதியாக சொல்லமுடியாது.......உனது 21-ம் வயதில்தான் நீ அவனை அறிவாய் அதுவரைக்கும் நீ பொறுமையாய் இரு இந்த கனவுப்பற்றி யாரிடமும் வெளியில் சொல்லவேண்டாம் என்று கண்டிப்பாய் சொன்னார் சாமியார்.......!

21-ம் வயதிலா?அப்போ இந்த ராகேஷ்.....?என்று மனதிற்குள் கேள்விக்குறியாய் அவரைப்பார்த்தாள் கயல்?????
கயலின் பார்வையை புரிந்து கொண்டவர் உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னிடம் தைரியமாகக்கேளுமா என்றார் சுவாமிஜி.........ஐயா அதுவந்து........அது.....என்று கயல் இழுக்க பரவாயில்லை எதுன்னாலும் மறைக்காம சொல்லு என்று அவர் சொல்ல?
தன் கனவில் இரண்டு நாட்கள் அந்த முகம் தெரிந்ததையும் அவர்கள் இரண்டுபேரும் என்னிடம் காதலை சொன்னவர்கள்தான் அதுவும் காதலை சொன்ன அந்த நாள்தான் எனக்கு அவர்கள் கனவில் முழுமுகமாக தோன்றினார்கள் என்றும் கயல் சொன்னாள்.

ம்........நீ சொல்றத வச்சிப்பார்த்தா அவங்க ரெண்டுபேர்ல ஒரு ஆளாகவும் இருக்கலாம்,இல்ல ரெண்டு பேரும் இல்லாமலும் இருக்கலாம் எது எப்டியோ 21வயது தொடங்கும் போது நிச்சயம் அவன் யாரென்று நீ அறிவாய் அதுவரை உன் கண்களுக்கு தெரிந்தாலும் உன் மன்னவன் இவன்தான் என்று உன்னால் உறுதியாக சொல்லமுடியாது என்று ஒருகுண்டைத்தூக்கிப்போட்டார்.

அது சரி கனவில் அவனைப்பார்க்கும் போது ஏதாவது அங்க அடையாளங்களோ?இல்லை அவனுடைய பெயரோ உனக்கு நினைவிருக்கிறதா என்று சாமியார் கேட்டார்?அப்பொழுதுதான் அவளுக்கு கயல்விழியாள் என்று உடம்பில் பச்சைக்குத்தியிருப்பது நினைவுக்கு வந்தது..........ஆமா ஐயா என்று இந்த விஷயத்தை சொன்னாள்.

அப்போ நிச்சயமாக இந்த ஜென்மத்துல அவனுக்கு இந்தமாதிரி ஏதாவது ஒன்று அவன் உடம்பில் பொறிக்கப்பட்டிருக்கும் இது என்னால் கணிக்கமுடிந்த உண்மைதான் கண்டிப்பா..........என்று அவர் உறுதியாய் நம்பிக்கையாய் சொன்னார்.

சரி எல்லாம் அவன் செயல் பார்ப்போம் இப்போது உனக்கு பதினெட்டு வயது ஆகிவிட்டதுதானே இன்னும் 3வருடங்கள் கழித்து அவன் உன்கண்முன் நிற்பான் அதன் பிறகு அவன்தான் உன் முன்ஜென்மக்காதலன் என்று நான் உறுதிபடுத்துகிறேன்........அதுவரைக்கும் நீ ரொம்ப கவனமா இரு என்று மறுபடியும் மறுபடியும் அவளை எச்சரித்தார் சாமியார்...........மாதத்திற்கு ஒருமுறை தவறாமல் வந்து விடுங்கள் என்று அவர் சொல்ல.............இனிதே விடைபெற்று அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்........!

வீட்டிற்கு சென்ற கயல்விழியால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை சாமியார் இப்படி சொல்கிறார் அப்போ ராகேஷ் விஷயத்தை என்னப்பண்ண நாமும் அவன்தான் கனவுக்காதலன் என்ற ஆசையில் அவனிடம் அவசரப்பட்டு சொல்லிவிட்டேன் அதுமட்டுமல்ல அவன் மிகவும் அன்பாய் நடந்து கொள்கிறான் அவன் பார்வையிலும் அவனுக்கும் நமக்கும் ஏதோ பந்தம் இருப்பது போன்ற ஒரு உணர்வு நிச்சயம் இவன்தான் அவன்...........என்று மனதிற்குள் நம்பிக்கை வைத்தாள்.

அடுத்தநாள் கல்லூரிக்கு சென்றகயல் தன் தோழிகளுக்கோ?அரவிந்துக்கோ?ராகேஷ்க்கோ?அவள் இந்த சாமியார் பற்றிய விஷயங்களை சொல்லவில்லை........மனதில் சற்று குழப்பமாகவே இருந்தாள் பழைய நிதானம் அவளிடம் இல்லை என்பதை முதல் பார்வையிலேயே கண்டுகொண்டான் ராகேஷ்.

என்ன என்பது போல் கண்அசைத்தான்........ஒன்றுமில்லை என்று தலை சாய்த்தாள்.

வழக்கம்போல் தோழிகளுடனும் காதலனுடம் அதிக நேரங்களை செலவு பண்ணியும் முன் ஜென்மக்கதை அது இதுன்னு சாமியார் சொன்னதை அவள் வெளியில் விடவில்லை அதை அவள் மறக்கவே முயற்சித்தாள்............

இரண்டு மாதங்கள் தொடர்ந்து அந்த சாமியாரை பார்க்க சென்றனர் இப்பொழுது அந்த கனவோ சந்தேகப்படும்படி மனிதர்களோ என் வாழ்வில் இன்னும் வரவில்லை என்று கயல் சொல்ல...........சரி அப்போ ஏதாவது மனசுக்கு சரி இல்லாமல் அப்டி ஏதாவது இருந்தால் மட்டும் இங்கு வந்தால் போதும் என்று கடைசியாக சாமியார் சொல்லி அனுப்பி வைத்தார்.

நாட்கள் சென்று கொண்டிருக்க தன் காதலன் ராகேஷின் மீது கொண்ட கண்மூடித்தனமான காதலாலும் தன் தோழிகளின் உடன் இருப்பதாலும் தன் அத்தையிடம் பேசியதாலும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கனவை மறக்க ஆரம்பித்தாள் கயல்விழி......!

சரியாக 1வருடங்கள் ஆகிவிட்டது இப்பொழுதெல்லாம் அந்த கனவை அவள் துளி அளவு கூட நினைப்பதில்லை ஆனால் அவள் எண்ணம் இரண்டு 1.தன் அத்தைக்குடும்பத்தை தாத்தாவிடம் சேர்க்கவேண்டும்.2.ராகேஷை எந்த பிரச்சனையும் இன்றி மணமுடிக்கவேண்டும்......இந்த இரண்டுமே அவளுக்கு மனதில் முழுவதுமாய் நிறைந்திருந்தது.

இரண்டாவது செமஸ்டர் எக்ஸாம் முடிந்து இன்றிலிருந்து விடுமுறை என்பதால் சிறிது நேரம் ராகேஷுடன் பேசிவிட்டு வருகிறேன் என்று தோழிகளிடம் சொல்லிவிட்டு ராகேஷைத்தேடி பக்கத்து காபிஷாப்க்கு சென்றாள்.

வேகுநேரமாயிட்டாடா சாரி டியர் என கெஞ்சியவள் அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்......அப்டி ஒன்றும் இல்ல செல்லம் பரீட்சை எல்லாம் நல்லா எழுதுனியா?என்று கேட்டான்.....ஆனால் அவன் கண்கள் நேராக அவள் முகத்தை பார்க்கவில்லை.

ம்......டா, நீ? நல்லா எழுதினேன் என்று சொன்னவன்.........அவனுக்கே தெரியாமல் அவள் கைகளை பற்றிக்கொண்டு அழுதான் அப்பொழுதுதான் அவன் கண்களில் இவ்வளவு கண்ணீர் தேங்கி நின்றிருப்பதை கவனித்தாள்.
ஏய் என்னடா ஆச்சி...... ஏன் அழறா? எல்லாரும் பார்க்கிறாங்க என்று அவனைத்தேற்றினாள் அவன் கைகளை பிடித்துக்கொண்டு..................அந்த சமயம் கயலிடம் தன் காதலை சொல்லி அவமானமடைந்த அந்த டிரெயினிங் ஆசிரியர் இங்கு நடந்த அனைத்தையும் பின்புற இருக்கையில் அமர்ந்து பார்த்து மனதிற்குள் பொறாமைத்தீஈ பற்றியெரிய கொந்தளித்துக்கொண்டிருந்தான்..........!




தொடரும்........!

எழுதியவர் : ப்ரியா (24-Dec-14, 12:38 pm)
பார்வை : 250

மேலே