அம்மாவின் அறிவோடு

அன்புக்கோர் எல்லை உண்டு
அங்கே அறிவுக்கோர் இடம் உண்டு
அம்மாவின் அன்பு எல்லாம்
அமிர்தமாய் இனித்திருக்க.

எல்லையே இல்லாமல்
என்னை அழைத்து செல்கிறதே
எப்படி எல்லாம் வாழ வேண்டும்
என எடுத்துரைத்த என் அம்மாவின்.

அறிவே என்னை இப்புவியில்
அழகாய் வாழ வைத்து
அற்புதங்கள் நான் படைத்து
அன்புடன் வாழ்கிறேன் நான் இன்று.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (25-Dec-14, 11:14 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 90

மேலே